ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

நிஸான் மேக்னைட்டிற்கு வழங்கப்படவுள்ள டர்போ பெட்ரோல் என்ஜினை ரெனால்ட்டின் ட்ரைபர் எம்பிவி காரும் பெற்றுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

இந்திய சந்தைக்கு முற்றிலும் புதியதான 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் முதன்முதலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் நிஸான் மேக்னைட்டில் பொருத்தப்பட்டிருந்தது. மிக விரைவில் அறிமுகமாகவுள்ள நிஸான் மேக்னைட்டை தொடர்ந்து இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் ரெனால்ட் ட்ரைபரிலும் வழங்கப்படவுள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது.

ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

ட்ரைபரில் ஏற்கனவே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் சாதாரண ஆற்றல்களையே வெளிப்படுத்துகிறது. அதுவே டர்போ-பெட்ரோல் வெர்சன் காருக்கு கூடுதல் ஆற்றலையும் வெளிபடும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும். 1.0 லிட்டர் நாட்சுரேலி-அஸ்பிரேட்டட் என்ஜினுக்கும் டர்போசார்ஜ்டு என்ஜினுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த அட்டவணையில் பார்க்கலாம்.

Displacement 1.0-litre naturally-aspirated 1.0-litre turbocharged
Power 72Ps 100Ps
Torque 96Nm 160Nm / 125Nm
Transmission 5-Speed MT 5-Speed MT / CVT
Claimed Fuel Efficiency 18.75 kmpl 20 kmpl / 17.7 kmpl
ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

இந்த அட்டவணையில் காட்டப்பட்டிருப்பது மேக்னைட்டில் 1.0 லி டர்போ என்ஜின் வெளிப்படுத்தவுள்ளதாக கூறப்பட்டவை ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், டர்போ-பெட்ரோல் என்ஜின் காருக்கு அதிக ஆற்றலை வழங்குவது மட்டுமில்லாமல், சிறந்த எரிபொருள் திறனையும் வழங்கும்.

ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் பெரிய சக்கரங்களையும் ட்ரைபர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 பிஎச்பி வரையில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த டர்போ என்ஜின் வழங்கப்படவுள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் ட்ரைபர் டர்போ காரில் ப்ரேக்கிங் அமைப்பு அப்டேட் செய்யப்படலாம்.

ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

இரட்டை-நிற பெயிண்ட்டில் கூடுதல் ப்ரீமியம் தரத்திலான உட்புற கேபின் மற்றும் பெரிய 16 இன்ச் அலாய் சக்கரங்களுடன் ட்ரைபரின் ஸ்பெஷல் வேரியண்ட்டை ரெனால்ட் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இவை அனைத்தும் ட்ரைபர் டர்போ காரில் வழங்கப்படலாம்.

ரெனால்ட் ட்ரைபருக்கு வலுச்சேர்க்க வருகிறது நிஸான் மேக்னைட்டின் டர்போ-பெட்ரோல் என்ஜின்!!

ரெனால்ட் ட்ரைபர் டர்போ, இந்நிறுவனத்தின் கிகருக்கு பிறகு அறிமுகமாகவுள்ளது. இதனால் புதிய 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மேக்னைட்டிற்கு பிறகு கிகரில் தான் வழங்கப்படவுள்ளது. ரெனால்ட்டின் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரான கிகர் அடுத்த 2021 ஆண்டின் துவக்கத்திலும், ட்ரைபர் எம்பிவி கார் 2021ஆம் ஆண்டின் மத்தியிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles

English summary
Renault Triber Will Make Use Of Nissan Magnite’s Turbo-petrol Engine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X