ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையில் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்கான அதிரடி திட்டத்தை ரெனோ கார் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் மஹிந்திரா கூட்டணியை கழற்றிவிட்டு இந்திய சந்தையில் தனி ஆவர்த்தனத்தை துவங்கியது. முதலில் சற்று தடுமாறினாலும், இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக புரிந்து கொண்டு பிரத்யேக மாடல்களை களமிறக்கத் துவங்கியது.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இந்திய சந்தைக்காக பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட க்விட், ட்ரைபர் ஆகிய கார் மாடல்கள் அந்த நிறுவனத்திற்கு சிறப்பான வர்த்தக வளர்ச்சியை பெற்று தந்தன.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இந்த நிலையில், அடுத்து கிகர் என்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ரெனோ நிறுவனம் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த மாடல் போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இதனிடையே, அடுத்த ஆண்டு வர்த்தகத்தை புதிய கோணத்தில் கொண்டு செல்வதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது. அதாவது, இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் புதிய டீலர்களுடன் வர்த்தகத்தை வளப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இதுகுறித்து ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திடம் பேசிய ரெனோ இந்தியா நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமில்லப்பல்லே,"2021ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளேன். ட்ரைபர் மற்றும் புதிய எஸ்யூவி மாடலுக்கு ஊரக சந்தையில் மிக அதிக வரவேற்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனாவால் வர்த்தகம் முழுமையாக ஸ்தம்பித்தாலும், கடந்த சில மாதங்களக விற்பனை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களில் ஊரகப் பகுதிகளில் எங்களது விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இந்த நிலையில், ட்ரைபர் மற்றும் புதிய கிகர் எஸ்யூவி மாடல்கள் சரியான பட்ஜெட்டில் அதிக வசதிகள் கொண்ட மாடலாக இருப்பதன் காரணமாக, ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ட்ரைபர், கிகர் கார்களுடன் ஊரக சந்தையை கலக்கப்போகும் ரெனோ!

இந்த சூழலில், அடுத்த ஆண்டு ஊரக சந்தையில் அதிக டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை திறப்பதற்கான திட்டத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ரெனோ கார் நிறுவனம். இதன்மூலமாக, அடுத்து வரும் ஆண்டுகளில் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
French carmaker Renault is planning to expand their presence in rural areas through Triber, Kiger car models in India.
Story first published: Friday, December 25, 2020, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X