கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

இந்தியாவில் சோதனை செய்யப்படும்போது ரெனால்ட் ஜோயி எலெக்ட்ரிக் கார் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காராக ஜோயி (Renault Zoe) உருவெடுத்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி - நவம்பர் கால கட்டத்தில் ரெனால்ட் நிறுவனம் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோயி எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

மூன்றாவது தலைமுறை ஜோயி எலெக்ட்ரிக் கார் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் தற்போது இந்த காரின் விற்பனை சிறப்பாக உள்ளது. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 2.68 லட்சம் ஜோயி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாக வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு அரசுகள் மானியங்களை வழங்கி வருவதும், இந்த சிறப்பான விற்பனைக்கு மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 2 நாடுகள்தான் ரெனால்ட் ஜோயி எலெக்ட்ரிக் காருக்கான முக்கியமான சந்தைகளாக உள்ளன.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

ரெனால்ட் நிறுவனம் நடப்பாண்டில் பிரான்ஸில் 33,000 ஜோயி எலெக்ட்ரிக் கார்களையும், ஜெர்மனியில் 25,000 ஜோயி எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 390 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். 110 எச்பி மற்றும் 135 எச்பி பவர்களை வெளிப்படுத்த கூடிய இரண்டு வெர்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இந்த காரின் பேட்டரியை வெறும் 1 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். 7.4 kWh வால் சார்ஜரை பயன்படுத்தினால், 9.5 மணி நேரம் ஆகும். நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஜோயி எலெக்ட்ரிக் காரை ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

இந்த சூழலில் பழைய தலைமுறை ரெனால்ட் ஜோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது கேமரா கண்களில் சமீபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டிருந்தாலும், இங்கு இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

ஆனால் ஜோயி எலெக்ட்ரிக் காருக்கு பதிலாக, ரெனால்ட் நிறுவனத்திடம் இருந்து க்விட் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோயி எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, க்விட் எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும். இந்திய சந்தைக்கு ஏற்ற விலையில் க்விட் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம்.

கேமரா கண்களில் சிக்கியது... ஐரோப்பாவை கலக்கி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வருகிறதா?

தற்போதைய நிலையில் க்விட் ஹேட்ச்பேக், ட்ரைபர் எம்பிவி மற்றும் டஸ்டர் எஸ்யூவி ஆகிய கார்களை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் எதையும் தற்போதைய நிலையில் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்யவில்லை. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Zoe EV Spied In India - Details. Read in Tamil
Story first published: Tuesday, December 15, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X