வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

ரெனால்ட் நிறுவனத்தின் ஸோயி மின்சார கார் இந்திய வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில், முதல் நாளான நேற்றைய தினம் ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய வாகனங்களை அறிமுகம் செய்தன.

அந்தவகையில், ரெனால்ட் நிறுவனமும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க உள்ள ஸோயி என்ற எலெக்ட்ரிக் காரை முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்ட இந்த கார் காம்பேக்ட் ஹேட்ச்பேக் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 52kWh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 239கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்பது சிறப்பான விஷயம்.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார் ஏற்கனவே பல வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அங்கு இரு வேரியண்டுகளில் அது விற்பனைக்கு கிடைக்கின்றது. அதில், ஓர் வேரியண்ட் 110 பிஎஸ் ஆர்110 திறனிலும், மற்றொன்று 135 பிஎஸ் ஆர்135 திறனிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவிற்கான மாடலில் இந்த திறன் மாறுபட்டு காணப்படலாம்.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

ரெனால்ட் நிறுவனம் இந்த சிறப்பு வாய்ந்த மின்சார காரை வருகின்ற 2021ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என கூறப்படுகின்றது. அப்போது சில மாற்றங்கள் மற்றும் மாடிஃபிகேஷனைப் பெற்று அது களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி வரும்போது ரூ. 14 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

தற்போது இந்திய வருகைக்கு பிள்ளையார் சுழி போடும் வகையிலேயே ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காட்சிப்படுத்தப்பட்ட ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற கவர்ச்சிக்காக 17 இன்ச் கொண்ட அலாய் வீல், எல்இடி டே டைம் மின் விளக்கு, எல்இடி டெயில் லேம்ப், உடல் தோற்றத்திலான ஹேண்டில்கள் மற்றும் குரோம் ஸ்டேம்ப் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

இதேபோன்று, குறிப்பிட்ட நடவடிக்கைகள் காரின் உட்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இருக்கைகளில் மட்டுமின்றி ஸ்டியரிங் வீலுக்கும் லெதர் உறை வழங்கப்பட்டிருப்பது மிகவும் பிரிமியம் தோற்றத்தை காருக்கு வழங்குகின்றது.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

இத்துடன், தொழில்நுட்ப வசதியாக ஈகோ சிஸ்டத்துடன் கூடிய ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ கார்ட், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், இன்டலிஜென்ட் கனெக்ட் சிஸ்டத்துடன் கூடிய ரேடியோ, குரல் கட்டளை, நேவிகேஷன், 4ஜி வைஃபை கன்னெக்ட் உள்ளிட்ட ஏராளமான சொகுசு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

இதில், மிக முக்கியமானதாக 9.3 இன்சிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட் கன்னெக்ட் வசிதயுடன் காரை இணைக்க உதவும்.

இதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களாக ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் காரில் இரண்டு டிரைவர் ஏர் பேக்குகள் மற்றும் 2 பாஸஞ்ஜர்களுக்கான ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

வாகன கண்காட்சியில் ரெனோ ஸோயி மின்சார கார் அறிமுகம்... இந்திய வருகை எப்போது தெரியுமா...?

இதுமட்டுமின்றி, கூடுதல் வசதியாக முன் மற்றும் பின் பக்கங்களில் எலெக்ட்ரிக் ஜன்னல்கள், தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங், பிளைண்ட் ஸ்பாட் சென்சார்கள், லேன் வார்னிங், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமிரா என பாதுகாப்பிலும் படு அமர்களமான காராக இது விளங்குகின்றது.

Most Read Articles

English summary
Renault Zoe EV Unveiled At 2020 Auto Expo. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X