இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதல் எலக்ட்ரிக் கார் ஐரோப்பிய சந்தைக்கு விற்பனைக்காக செல்லவுள்ளது. என்ன கார் அது? யார் தயாரிப்பது? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300, வழக்கமான மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சன், இதுதான் விரைவில் ஐரோப்பிய நாட்டு சந்தைகளை சென்றடையவுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் 2021ன் இறுதியிலோ அல்லது 2022ன் துவக்கத்திலோ இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

மிகவும் மலிவான விலை கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காராக ஐரோப்பாவில் மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 கார் விற்பனையை துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியாகியிருந்த தகவல்களின்படி மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் கார் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 300கிமீ தூரத்திற்கு இயங்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

இந்த எலக்ட்ரிக் காருக்கு முன்னதாக பெட்ரோல் என்ஜின் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்லவுள்ளது. தற்சமயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், எதிர்காலத்தில் முடிந்தவரை இஎக்ஸ்யூவி காரை ஐரோப்பாவிலேயே தயாரிக்கவே மஹிந்திரா நிறுவனம் விரும்புகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

ஏனெனில் இவ்வாறான செயல்பாடுகளால் விலையை குறைவாக நிர்ணயப்பதற்கும் பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மோட்டார் உள்ளிட்டவற்றை பெறுவதில் ஏற்படும் தடைகளை களைவதற்கும் மஹிந்திரா நிறுவனத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

ஆன்லைன் ஊடக வெளியீட்டின்போது மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாபு இதுபற்றி பேசும்போது, மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 காரின் லித்தியம்-இரும்பு பேட்டரி மற்றும் மற்ற பாகங்கள் அனைத்தையும் இந்தியாவில் தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது என கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

அப்படி நடந்தால் இந்த மாடல்தான் ஐரோப்பா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்லும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக விளங்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

இந்திய சந்தையில் ஏற்கனவே டாடா நெக்ஸான் காம்பெக்ட்-எஸ்யூவி இவி கார் ரூ.12- ரூ.13 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனையில் உள்ளது. இதனால் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 மாடல் இதன் விற்பனை போட்டியினை எதிர்கொண்டாக வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?

மஹிந்திரா மின்சார அளவிடக்கூடிய மட்டு கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்ட முதல் காராக விளங்கவுள்ள எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 40kWh (ஸ்டாண்டர்ட்) மற்றும் 60kWh (அதிக ரேஞ்ச்) என்ற இரு விதமான பேட்டரி தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில் 60kWh பேட்டரி அதிகப்பட்சமாக 450கிமீ தூரத்திற்கு ஒற்றை-முழு சார்ஜில் காரை இயக்கி செல்லும் என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Reports says Mahindra eXUV300 could be first made in Indian electric suv in europe.
Story first published: Sunday, December 20, 2020, 2:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X