வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை கொண்டுவரப்பட்ட ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 தற்போதும் விற்பனையில் உள்ளதா இல்லையா என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் 245 செடான் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது. வெறும் 200 யூனிட்களில் சந்தைப்படுத்தப்பட்ட இந்த ஸ்கோடா கார் முற்றிலும் விற்று தீர்க்கப்பட்டு விட்டதா இல்லையா என்பது கேள்வியாக உள்ளது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து டீம் பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்கோடாவின் புதிய அறிமுகமான ஆக்டேவியா ஆர்எஸ் 245 தற்போதும் ரூ.36 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

மேலும் ஆக்டேவியா ஆர்எஸ் 245 காரின் இறுதிக்கட்ட விலை தான் வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையானவர்களை இந்த செடான் காரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின் வாங்க வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

ஏனெனில் இதன் பெங்களூர் ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.45 லட்சத்தை தாண்டி செல்கிறது. இதனால் சில வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்தும், சில வாடிக்கையாளர்கள் இந்த தொகையில் லக்சரி பிராண்டில் இருந்தே கார்களை வாங்கலாம் எனவும் தங்களது முடிவை மாற்றியுள்ளனர்.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

ஆனால் உண்மையில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஜாகுவார் கார்களுக்கு இணையாகவும், இந்த ஆன்-ரோடு விலையினை நியாயப்படுத்தும் வகையிலும் ஆர்எஸ் 245 காரில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

இதன் காரணமாக ஆக்டேவியா ஆர்எஸ் 245 காரின் மீதான தங்களது ஆர்வத்தை கார் விற்பனைக்கு வருவதற்கு முன்பே வெளிப்படுத்தி இருந்தவர்கள் ஸ்கோடா டீலர்களிடம் சில ஒப்பந்தங்களுடன் காரை பெற்று வருகின்றனர். ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 செடான் கார் முதன்முதலாக இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

அதன்பின் விற்பனைக்கு வந்த இந்த காருக்கு இந்தியா முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது இதன் விற்பனை எண்ணிக்கைகளை மாநிலம் வாரியாக பார்க்கும்போது தெரிய வருகிறது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டேவியாவின் இந்த லிமிடேட் எடிசன் காரை டீலர்கள் தற்போதும் புதிய இந்திய இறக்குமதி விதிகளின்கீழ் எந்தவொரு ஒத்திசைவும் இல்லாமல் டீலர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

அதாவது இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய விதியின்படி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டிற்கு 2,500 வாகனங்களை எந்தவொரு ஒத்திசைவு தேவையும் இல்லாமல் சிகேடி முறையிலோ அல்லது சிபியூ முறையிலோ இந்தியாவில் இறக்குமதி செய்து கொள்ளலாம்.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களும் சர்வதேச வாகன தரநிலைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 லிமிடேட் எடிசன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

அதிகப்பட்சமாக 242 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் பெடல் ஷிஃப்டர்கள் இணைக்கப்படுகின்றன. இந்த என்ஜின் மூலமாக 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் அடைந்தவிடக்கூடிய இந்த ஸ்கோடா ஆர்எஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும்.

வெறும் 200 மாதிரிகளுடன் விற்பனைக்குவந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245... தற்போதும் விற்பனையில் உள்ளதா?

ஒருவழியாக ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 இந்தியாவில் இன்னமும் விற்பனையில் இருப்பதை இந்த செய்தியின் மூலமாக அறிந்து கொண்டோம். ஏனெனில் இந்த லிமிடேட் எடிசன் கார் முற்றிலும் விற்று தீர்க்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் எப்படியிருந்தாலும் இந்த காரின் ஆன்-ரோடு விலை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இல்லை என்பது எனது கருத்து.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Octavia RS 245 Still Available In India: Not Sold Out?
Story first published: Tuesday, September 8, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X