சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

ஐரோப்பிய நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள சியட் (SEAT) அரோனா எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

ஜெர்மனி ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் பிராண்ட் போர்ஷே, லம்போர்கின், புகாட்டி, பெண்ட்லீ, ஆடி, ஸ்கோடா மற்றும் சியட் என பல பிராண்ட்களை சொந்த கொண்டுள்ளது. இதில் ஒன்றான சியட் பிராண்டின் அரோனா எஸ்யூவி தான் தற்போது இந்தியாவில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் அங்கம் வகிக்கும் ஒரு பிராண்ட் சியட் என்பதை தவிர்த்து வேறெந்த விபரமும் இந்த ஸ்பானிஷ் கார் தயாரிப்பு நிறுவனத்தை பற்றி அறிய முடியவில்லை. இந்தியாவில் மறைமுகமாக, நேரடியாக என ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பிராண்ட்களும் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

சியட் பிராண்டில் இருந்து மட்டும் தான் தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் தான் சமீப காலமாக சியட் கார்கள் இந்திய சாலைகளில் தொடர்ந்து சோதனைகளின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை இந்த சோதனை மும்பை- புனே நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை ரஷ்லேன்செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

இங்கு தான் நமக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது, ஃபோக்ஸ்வேகன் உண்மையில் ஸ்பானிஷ் சியட் பிராண்ட்டை இந்தியாவிற்கு கொண்டுவருமா? ஏனென்றால் ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா என்ற இரு பிராண்ட்கள் இந்த க்ரூப்பின் கீழ் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

இவற்றிற்கிடையில் புதிய பிராண்ட்டை கொண்டுவந்தால் அவற்றின் விற்பனையும் பாதிக்கும். அப்படியென்றால் ஏன் இந்த அரோனா எஸ்யூவி காரின் சோதனை ஓட்டம்? தற்சமயம் ஃபோக்ஸ்வேகன் அதன் முழு இந்திய வணிகத்தையும் மாற்றியமைத்து வருகிறது.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

இதன்படி இந்நிறுவனம் சந்தையில் தன்னை மாற்றியமைக்கவும், அதிக உள்ளூர்மயமாக்கப்பட்ட வாகனங்களை கொண்டு வரவும், நாட்டில் அதன் சந்தைப் பங்கை மேம்படுத்தவும் அதன் துணை பிராண்ட்டான ஸ்கோடாவிற்கு இந்தியா 2.0 என்ற திட்டத்திற்கு தலைமை தாக்கும் பணியினை கொடுத்துள்ளது.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

இந்த வகையில் முக்கியமான மாற்றமாக கொண்டுவரப்படும் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஏகப்பட்ட புதிய கார்கள் ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் இருந்து வெளிவரவுள்ளன. சியட் அரோனாவும் இந்த ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டது தான்.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

அதேபோல் விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவி கார்களையும் இந்த ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த செய்தி தொகுப்பின் மூலமாக சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

அப்படியென்றால் எதற்குதான் இந்த சோதனை ஓட்டம்? அடுத்த வருடத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா விஷன் இன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அவையும் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்படுவதால் அவற்றிற்கு மாற்றாக இருக்க வாய்ப்புள்ளது.

சியட் அரோனா எஸ்யூவி இந்தியாவில் சோதனை... புதிய பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருகிறா ஃபோக்ஸ்வேகன்?

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக விற்பனை வரவுள்ள இந்த இரு எஸ்யூவி மாடல்களிலும் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்படுவதால் இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் குறைவாகவே எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Seat Arona SUV spied again in India – Volkswagen testing platform for Taigun
Story first published: Tuesday, August 25, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X