புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் எக்ஸ்டென்டெட் என்ற அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களின் கனவு கார் மாடலாக ரோல்ஸ்ராய்ஸ் உள்ளது. ஒவ்வொரு கார் வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கும் அத்துனை சிறப்புகளையும் தனது காரில் வழங்குவதற்கு ரோல்ஸ்ராய்ஸ் முனைந்து வருகிறது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

அதிக இடவசதி, சக்திவாய்ந்த எஞ்சின், ஏராளமான சொகுசு அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு தனது கார் மாடல்களில் பல்வேறு அம்சங்களை செய்து கொடுத்து வருகிறது ரோல்ஸ்ராய்ஸ். இந்த நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பட்ஜெட் மாடலாக கோஸ்ட் கார் உலக அளவில் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் இரண்டாவது தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில், புதிய தலைமுறை கோஸ்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது அதன் அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் Extended என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த அதிக வீல் பேஸ் கொண்ட மாடலுக்கு ரூ.7.95 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண மாடலைவிட இந்த புதிய மாடலுக்கு ரூ.1 கோடி கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த புதிய மாடலுக்கு இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் எக்ஸ்டென்டெட் மாடலானது 5,715 மிமீ நீளம் கொண்டது. ஸ்டான்டர்டு கோஸ்ட் காரைவிட 170 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் பெற்றிருக்கிறது. இதனால், உட்புறத்தில் அதிகப்படியான இடவசதியை பெற்றுள்ளது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரின் பின் இருக்கைகள் சாய்மான வசதியுடன் வந்துள்ளன. பின் இருக்கைகளுக்கு நடுவில் சிறிய குளிர்சாதன வசதி, 18 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் உட்புற கூரையில் வானில் நட்சத்திரங்களை பிரதிபலிக்கும் வகையிலான சிறிய விளக்குகளுடன் கூடியதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆலை அமைந்துள்ள குட்வுட் பகுதியிலிருந்து பார்க்கும்போது வானில் இருக்கும் அதே நட்சத்திரங்கள் அமைப்பை இது பிரதிபலிக்கும்.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி கடத்தப்படும் தொழில்நுட்பம் உள்ளது.

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

சாலையில் உள்ள மேடு, பள்ளங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு தக்கவாறு சஸ்பென்ஷனை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம், ஆல் வீல் ஸ்டீயரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் வந்துள்ளது.

Most Read Articles

English summary
Second Gen Rolls Royce Ghost LWB launched In India. Here are the complete details in Tamil.
Story first published: Friday, September 25, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X