இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தற்சமயம் கோஸ்ட் மாடலின் புதிய தலைமுறை காரின் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் முதல் டீசர் படம் தயாரிப்பு நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ளது.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

உலகளவில் பிரபலமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் முன்னதாக புதிய தலைமுறை கோஸ்ட் காரை இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கவே இதன் அறிமுகத்தில் தாமதமானது.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

இந்த நிலையில் இதன் தயாரிப்பு பணிகளை உறுதிப்படுத்தும் வகையிலும் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் சிஇஒ டார்ஸ்டன் முல்லர்-ஓட்வோஸ் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு காரின் வெளிப்புற லைனை தெரியப்படுத்தும் வகையிலும் முதல் டீசர் படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

தற்சமயம் விற்பனையில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் 2009ல் இருந்து விற்பனையில் உள்ளது. சுமார் 11 வருடங்களாக தற்போதைய தலைமுறை கார் விற்பனையில் இருப்பதற்கு காரணம், ப்ராண்ட்டின் 116 வருட வரலாற்றில் மற்ற எந்தவொரு மாடலுக்கும் இல்லாத வகையில் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவது என்ற ஒன்று மட்டுமே ஆகும்.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

இதனால் தான் இதன் புதிய தலைமுறை காரை பற்றிய ஆவலும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவ தொடங்கிய போது இந்த காரின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்ததாகவும், ஊரடங்கு அமலுக்கு வந்தபோதிலும் தங்களது குழுவினர் தொடர்ந்து பணியாற்றி காரை கட்டமைத்து முடித்துள்ளனர் என்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

புதிய தலைமுறை கோஸ்ட் மாடல் நிறுவனத்தின் புதிய அலுமினியம் கட்டமைப்பில் உருவாக்கப்படவுள்ளது. இதே கட்டமைப்பின் அடிப்படையில் தான் இந்நிறுவனத்தின் பாண்டோம் VII மற்றும் கல்லினன் மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

கதவுகளை ஒருங்கிணைத்த குடை வடிவிலான தோற்றத்தை தவிர்த்து மற்ற அனைத்து பாகங்களும் புதியதாக மிகவும் லக்சரி தரத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக புதிய தலைமுறை கோஸ்ட் காரை வடிவமைத்து வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சிஇஒ மேலும் கூறுகையில், எங்களது வாடிக்கையாளர்கள் எளிமையான டிசைனிலேயே தயாரிப்புகளை எதிர்ப்பார்க்கின்றனர்.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

அதேபோல் தங்கள் காரில் புதுமையான ஆனால் சிரமமில்லாத தொழில்நுட்பத்தையும் எதிர்பார்க்கும் அவர்கள் அதேநேரத்தில் காரில் உண்மையான பொறியியல் பாகங்களும் இருக்க வேண்டும் என்கின்றனர் என கூறினார். இதன்படி பார்க்கும்போது கோஸ்ட் மாடலின் புதிய தலைமுறை, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முழு திறமை மற்றும் அனுபவத்துடன் உருவான காராக வெளிவரும் என்பது உறுதி.

இப்போதே ஆர்வத்தை கிளப்பும் புதிய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்... முதல் டீசர் படம் வெளியீடு...

இதற்கு மத்தியில் வரும் வாரங்களில் புதிய வீடியோக்களின் மூலமாக காரை பற்றிய விபரங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் உலகம் முழுவதிலும் அறிமுகமாகவுள்ள இந்த காரின் இந்திய வருகை அடுத்த வருடத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Next-Generation Rolls-Royce Ghost Teased; Global Debut This Year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X