ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. டெலிவிரி துவங்கப்படும் தேதி விபரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் பிஎஸ்-6 எஞ்சினுடன் கூடிய ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஏற்கனவே வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் நீக்கப்பட்டதுடன், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் கார் களமிறக்கப்பட்டது. இந்த மாடலின் விலை மிக சவாலாக நி்ர்ணயிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் ரேபிட் காரில் வழங்கப்பட இருக்கிறது.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த மாடலுக்கு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.25,000 முன்பணத்துடன் டீலர்கள் அல்லது ஸ்கோடா இந்தியா இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் எனப்படும் சாதாரண வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.24 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களு்ககு வரும் செப்டம்பர் 18ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். மேலும், அடுத்த மாதம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கான விலை அறிவிப்பும் வெளியிடப்படும்.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

வசதிகளை பொறுத்தவரையில் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் அதே வசதிகள் தக்கவைக்கப்படும். இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஸ்கோடா ரேபிட் காரின் மேனுவல் மாடலானது ரைடர், ரைடர் ப்ளஸ், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல், மான்ட்டே கார்லோ ஆகிய வேரியண்ட்டுகளில் ரூ.7.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் மாடலானது நடுத்தர மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும். மேனுவல் வேரியண்ட்டுகளுக்கு மிக சவாலான விலை நிர்ணயித்ததை போலவே, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கும் மிக சவாலான விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has commenced pre-bookings for the Rapid petrol automatic model in India.
Story first published: Thursday, August 27, 2020, 15:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X