ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

உலகளவில் பிரபலமாக்கும் நோக்கில் ஸ்கோடா நிறுவனம் அதன் முதல் முழு-எலட்ரிக் வாகனமான என்யாக்கின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

ஸ்கோடா வெளியிட்டுள்ள இந்த டீசர் படங்களில் ஒன்றில் என்யாக் காரின் புத்தம் புதிய முழு-எல்இடி மேட்ரிக் ஹெட்லைட் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது. மற்றொரு படத்தில் டெயில்லேம்ப் முன்னுறுத்தி காட்டப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

மாடர்ன் டிசைன் மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரின் தற்போதைய டீசர் படங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ள ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்பின் வடிவம் மற்றும் ஸ்டைல் ஸ்கோடாவின் மற்ற மாடர்ன் கார்களுடன் பெரிய அளவில் ஒத்துப்போகிறது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

இந்த வகையில் ஸ்காலா மற்றும் காமிக் மாடல்களில் வழங்கப்பட்டுள்ள இந்த ஹெட்லைட்களின் டிசைனை வடிவமைக்க கிட்டத்தட்ட 18 மாதங்கள் தேவைப்பட்டதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சில கார்களுடன் ஹெட்லைட்டை ஒத்து பெற்றிருந்தாலும் இந்த எலக்ட்ரிக் காரின் ஹெட்லைட் டிசைனில் கூடுதலாக க்ரிஸ்டலைன் பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

இதனுடன் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் மற்றும் புதியதாக அறுகோண வடிவத்தில் முக்கிய எல்இடி தொகுதிகளையும் என்யாக் எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. க்ராஸ்ஓவர் ஸ்டைலில் இந்த ஐவி கார் தயாரிக்கப்பட்டு வருவதால் எதிர்பார்த்தை போல் உயரமான நிமிர்ந்த தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

ஆனால் பொனெட்டின் நீளம் என்யாக்கில் சற்று சிறியதாகவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பேட்டரி தொகுப்பு காருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பாகங்களுக்கு பெரிய அளவில் இடம் தேவையில்லாததால் கேபின் சிறியதாக இருக்குமோ என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

என்யாக் எலக்ட்ரிக் காரின் இழுவை குணகம் வெறும் 0.27 என ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. வலது ட்ரைவிங் ஸ்டைலை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரில் சிங்கிள்-மோட்டார் அமைப்பானது 82kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

இந்த மோட்டார் அமைப்பின் உதவியுடன் கிட்டத்தட்ட 500கிமீ தூரத்திற்கு காரை இயக்க முடியும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அறிமுகத்திற்கு சில காலம் கழித்து ஆற்றல்மிக்க இரட்டை-மோட்டார் அனைத்து-சக்கர ட்ரைவ் வெர்சனையும் என்யாக் காருக்கு வழங்க ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார்... என்யாக்... புதிய டீசர் படங்கள் வெளியீடு...

என்யாக் இவி காருக்கு 5 பவர் வேரியண்ட்கள் மற்றும் மூன்று பேட்டரி தேர்வுகளை வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதனால் அறிமுகத்திற்கு முன்னதாக இந்த காரின் டீசர் படங்களை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Enyaq teased with full-LED Matrix lights ahead of 1 September debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X