ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான புதிய அறிமுக கார்கள் இவைதான்..!

ஸ்கோடா நிறுவனம் இந்த 2020ஆம் ஆண்டில் ஐந்து புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டுமிட்டிருக்கிறது. ஸ்கோடா நிறுவனம் 2.0 கார்ப்ரேட் வியூகத்தின் ஒரு பகுதியாக சில புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ், சர்வீஸ் & மார்க்கெட்டிங் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் முன்னதாக கூறியிருந்தார்.

இந்நிறுவனம் இந்த புதிய வருடத்தில் அறிமுகப்படுத்தவுள்ள அந்த ஐந்து மாடல்களை பற்றி இந்த செய்தியில் இனி காண்போம்.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது அடுத்த தயாரிப்பு மாடலான விஷன் இன் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னதாக எம்க்யூபி ஏ0 இன் எஸ்யூவி என பெயரிடப்பட்டிருந்த இந்த காருக்கு பிறகு விஷன் இன் என பெயர் மாற்றப்பட்டது.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

இரண்டாவது அறிமுக மாடலாக கரோக் எஸ்யூவியையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் மாடலுடன் போட்டியிடுவதற்காக பிரேத்யகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி மாடல் சிபியூ முறையில் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ளது.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 146 பிஎச்பி பவரை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் காருக்கு வழங்குகிறது. இந்த காரின் அறிமுகம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

2020ல் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள மூன்றாவது கார் ராபிட் ஃபேஸ்லிஃப்ட் ஆகும். முந்தைய ராபிட் மாடலில் இருந்து மிகவும் நுட்பமான மாற்றங்களை ஏற்றுள்ள இந்த காரில் இந்நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

இந்த என்ஜின் இரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று 94 பிஎச்பி/ 175 என்எம் டார்க், மற்றொன்று 113 பிஎச்பி/ 200 என்எம் டார்க் என்பவையாகும். ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

ஸ்கோடாவில் இருந்து இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ள நான்காவது கார் சூப்பர்ப் எக்ஸிக்யூட் செடான். இந்த செடான் மாடலின் அறிமுகம் 2020ன் பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த 2020 சூப்பர்ப் மாடல் மூன்று என்ஜின் தேர்வுகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

அந்த மூன்று என்ஜின் தேர்வுகளாவன, 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வு, 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் மற்றும் பெட்ரோல் என்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்ட மில்ட்-ஹைப்ரீட் அமைப்பு ஆகும்.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

இந்த புதிய ஆண்டில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள மாடல்களில் நாம் கடைசியாக பார்க்கப்போவது ஆக்டேவியா ஆர்எஸ் 245. ஆக்டேவியாவின் முந்தைய மாடல் அறிமுகமான ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து கார்களும் விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்றால் ஆக்டேவியா மாடல்களுக்கு இந்திய சந்தையில் இருக்கும் வரவேற்பை பாருங்கள்.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடலில் 2.0 லிட்டர் டர்போ-சார்ஜ்டு டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் அமைப்பை கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலின் அதிகப்பட்ச அளவு 245 பிஎச்பி ஆகும். ஸ்கோடா நிறுவனத்தின் லைன்-அப் மாடல் கார்களில் இந்த ஆக்டேவியா மாடல் தான் வேகமான மற்றும் விலையுயர்ந்த காராகும்.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

ஸ்கோடா நிறுவனம் மட்டுமில்லாமல் வேறு சில நிறுவனங்களும் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டிற்கும் மேற்பட்ட புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. இந்த வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் நான்கு புதிய எஸ்யூவிகளை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம்.

ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கார்கள் இவைதான்..!

இவ்வாறு முன்னணி நிறுவனங்களும் அடுத்தடுத்த கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது கார் பிரியர்களிடையே மிகுந்த ஆச்சிரியத்தை உண்டாக்கியுள்ளது. ஸ்கோடா, எம்ஜி நிறுவனங்களை போல் எந்தெந்த நிறுவனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அதிகளவில் தயாரிப்பு மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளன என்பது இனி வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Five New Skoda Cars Could Be Showcased At Delhi Auto Expo 2020: Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X