பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா காமிக் எஸ்யூவி மாடல் இந்திய சாலையில் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முழு தோற்றத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள இந்த காரின் சோதனை ஓட்ட படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஸ்கோடா காமிக் மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. இதனாலும், தொடர் சோதனை ஓட்டங்களினாலும் இந்த எஸ்யூவி கார் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்ற நிலையில் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் ஸ்கோடாவின் புதிய காமிக் மாடலுக்கு நமது நாட்டு சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டி-ராக், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் புதிய காமிக் எஸ்யூவி பெரும்பான்மையான டிசைன் பாகங்களை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலில் இருந்து பெற்றுள்ளது. முன்புறத்தில் நிமிர்ந்த பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் யூனிட், ஸ்கோடாவின் தனித்துவமான க்ரில் அமைப்பிற்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

காரின் பக்கவாட்டுகளில் உள்ள கூர்மையான ரன்னிங் லைன்கள் 2020 ஆக்டேவியா மாடலுடன் ஒத்து போகிறது. தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் இந்த எஸ்யூவி காரில் ரூஃப் ரெயில், கிடைமட்டமான L வடிவிலான டெயில் லைட்கள், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் ஐரோப்பியன் வடிவில் பொனெட் உள்ளிட்டவற்றை ஸ்கோடா நிறுவனம் பொருத்தியுள்ளதை வெளிக்காட்டுகின்றன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

வேரியண்ட் தேர்வை பொறுத்து இந்த காரில் 18-இன்ச் மற்றும் 19-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்படவுள்ளன. காமிக் மாடலின் நீளம் 4,241மிமீ, அகலம் 1,793மிமீ, உயரம் 1,531மிமீ மற்றும் வீல்பேஸ் 2,651மிமீ ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இது இதன் ஐரோப்பிய வெர்சனின் பரிணாம அளவுகளாகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

இருப்பினும் இதே அளவுகளில் தான் இந்தியாவிலும் காமிக் மாடல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம் சர்வதேச சந்தையில் காமிக் எஸ்யூவி மாடலை மூன்று பெட்ரோல், இரு டீசல் மற்றும் ஒரு சிஎன்ஜி என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்து வருகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

இதில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினானது 94 பிஎச்பி/175 என்எம் மற்றும் 113 பிஎச்பி/200 என்எம் என்ற இரு விதமான நிலைகளில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் தேர்வாக கிடைக்கிறது. மற்றொரு 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

இதன் டீசல் வேரியண்ட்களில் 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இவற்றுடன் சிஎன்ஜி வேரியண்ட்டில் வழங்கப்படுகின்ற 1.0 லிட்டர் ஜி-டிஇசி என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

இந்த அனைத்து என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படுகிறது. இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான என்ஜின் தேர்வுகளுடன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் புதிய காமிக் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் தான் கிடைக்கவுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இணையான தோற்றத்துடன் ஸ்கோடா காமிக்... க்ரெட்டாவிற்கு சரியான போட்டி மாடல்

யுரோ என்சிஏபி சோதனையில் அதிகப்பட்ச ஐந்து நட்சத்திரங்களை இந்த எஸ்யூவி மாடல் பெற்றிருந்தாலும் இந்தியாவில் விலைக்கு ஏற்றாற்போல் லிமிடேட் பாதுகாப்பு அம்சங்களுடன் தான் வெளிவரவுள்ளது. ஸ்கோடா காமிக் எஸ்யூவி மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.20 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pics Source: AutoWheels India

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kamiq SUV (Creta/Seltos Rival) Spied On Test In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X