ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காரின் கிட்டத்தட்ட அனைத்து மாதிரி கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக ஸ்கோடா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஜாக் ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

ஸ்கோடா இந்தியா நிறுவனம் கரோக் எஸ்யூவி காரை இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்த இந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த நிலையில்தான் தற்போது இந்த எஸ்யூவி காரின் முதல் தொகுப்பு முழுவதும் கிட்டத்தட்ட விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

இந்த தகவலை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சேவை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலின்ஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் தொகுப்பாக 1000 கரோக் கார்கள் முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

இவை அனைத்து அறிமுகமான 9 மாதத்திற்கு உள்ளாகவே விற்று தீர்க்கப்பட்டு உள்ளதாக ஜாக் ஹோலின்ஸ் அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த நிதியாண்டில் குறைந்தது 1000 கரோக் கார்களையாவது இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இந்த காரை தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

ஆனால் தற்போது இந்த நிதியாண்டு முடிவதற்கு நீண்ட நாட்கள் உள்ள நிலையில் ஸ்கோடா நிறுவனம் அதன் இலக்கை எளிதாக எட்டியுள்ளது. எந்தவொரு ஒத்திசைவும் தேவையின்றி வருடத்திற்கு 2500 வாகனங்களை சிகேடி அல்லது சிபியூ (முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில்) முறையில் இந்தியாவில் இறக்குமதி செய்து தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யலாம் என அரசாங்கம் வாகன இறக்குமதியை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

இதனை பயன்படுத்தியே ஸ்கோடா நிறுவனம் கரோக்கை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வாறான சலுகையினை பெற இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களும் சர்வதேச ஆட்டோமோட்டிவ் தரநிலைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான செய்திகளில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை இது நடந்தால் காரின் எக்ஸ்ஷோரூம் விலை பெரிய அளவில் குறைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கரோக்கிற்கு அதிக வாடிக்கையாளர்கள் சேரலாம்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

இருப்பினும் இந்த உள்ளூர்மயமாக்கல் நடவடிக்கை குறித்து ஸ்கோடா நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிராண்டின் எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்கோடா கார் பிரிவில் உள்ள மற்ற ப்ரீமியம் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக கம்பீரமான மற்றும் நிமிர்ந்த தோற்றத்தை கொண்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

ஸ்கோடா ஆக்டேவியா, கோடியாக் மற்றும் கரோக்கின் முதன்மை போட்டியான ஃபோக்ஸ்வேகன் டி-ராக்கின் அதே ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் கரோக்கை ஒரே ட்ரிம்மில் தான் வாங்க முடியும். ஆனால் அதேநேரம் கேண்டி வெள்ளை, மேஜிக் கருப்பு, காந்த பழுப்பு, லாவா நீலம், ப்ரில்லியண்ட் சிலவர் மற்றும் குவார்ட்ஸ் க்ரே என்ற ஆறு நிறங்களில் ஏதேனும் ஒரு நிறத்தில் கரோக்கை தேர்வு செய்யலாம்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா!! யாருமே எதிர்பார்க்கல

இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் டிஎஸ்ஜி இரட்டை-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 9 வினாடிகளில் எட்டிவிடும் ஸ்கோடா கரோக்கின் அதிகப்பட்ச வேகம் 202kmph ஆகும்.

ஒற்றை ட்ரிம் மற்றும் என்ஜின் தேர்வில் இந்த ப்ரீமியம் மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டாலும் சந்தையில் நல்லப்படியாகவே விற்பனையானது. இதனால் இதன் இரண்டாவது தொகுப்பு கார்களையும் மிக விரைவில் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Karoq almost sold out in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X