Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் கோடியாக் காரை விற்பனைக்கு கொண்டுவர தயாராகும் ஸ்கோடா!! இம்முறை பெட்ரோல் என்ஜின் உடன்...
கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் உலகளாவிய அறிமுக பணிகளில் ஸ்கோடா அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக்கின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் இப்போதுவரையில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்கிரேட் செய்யப்படவில்லை. ஏனெனில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் உடன் கோடியாக்கை அடுத்த 2021ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

இதற்கு மத்தியில் சர்வதேச சந்தையில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகவுள்ளது. இதன் அடிப்படையில்தான் இந்தியாவிற்கு வரும் 2021 கோடியாக்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் முதன்முறையாக செக் குடியரசு நாட்டில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக காரின் முன் மற்றும் பின்பக்கம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சி வடிவிலான முன்பக்க க்ரில் சற்று அகலமானதாகவும், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மறுவேலை செய்யப்பட்ட டிஆர்எல்கள் உடனும் பவல் எஸ்ஆர்பி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை வீடியோவில் காட்சியளிக்கின்றன.
ஹெட்லேம்ப்களுக்கு கீழே வழங்கப்படும் சிறிய மூடுபனி விளக்குகளின் டிசைனில் பெரிய அளவில் மாற்றமில்லை. பின்பக்கத்தில் இந்த சோதனை கோடியாக் கார் பிளவுப்பட்ட வடிவில் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது. இந்த டெயில்லைட் அமைப்பின் உட்புறத்தில் வழங்கப்படும் பல்ப்களின் டிசைன் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

இவற்றுடன் வித்தியாசமான டிசைனில் அலாய் சக்கரங்களை கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்றுள்ளது. இவை தவிர்த்து காரின் மற்ற பாகங்களில் எந்த அப்கிரேடும் இருப்பதுபோல் தெரியவில்லை. உட்புற கேபின் புதிய நிறங்களின் உள்ளமைவுகளை ஏற்கலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், 2021 ஸ்கோடா கோடியாக் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் உடன் இந்தியாவிற்கு வரவுள்ளது. ஸ்கோடாவின் தாயகமான செக் குடியரசில் கூடுதலாக டீசல் என்ஜின் உடன் ஹைப்ரீட் என்ஜின் தேர்வும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம்.

இந்திய மாடலில் வழங்கப்படவுள்ள 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும்.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் உலகளாவிய அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம். இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அடிப்படையாக கொண்டு வெளிவரும் கோடியாக் டிஎஸ்ஐ மாடலின் இந்திய அறிமுகம் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.