ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் புதிய பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் எஞ்சின் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி முக்கிய போட்டியாளராக விளங்குகிறது. தற்போது ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி அமலுக்கு வர இருப்பதையடுத்து, டீசல் எஞ்சின் தேர்வை விலக்கிக் கொள்ள ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டான லாரின் அண்ட் க்ளமென்ட் (L&K) மாடல்தான் அங்கு காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 7 ஸ்படு டிஎஸ்ஜி டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் இந்த எஸ்யூவியில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்விலும் கிடைக்கும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

புதிய எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதை தவிர்த்து, வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை. ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் வெர்ச்சுவல் காக்பிட் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் 2.0 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் மாடலானது மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரூ.32.99 லட்சம் முதல் ரூ.36.79 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய பிஎஸ்-6 மாடலின் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்படும். விலை அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Skoda Auto has showcased Kodiaq SUV's petrol model at Auto Expo. It will be launched in India very soon.
Story first published: Saturday, February 8, 2020, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X