சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

ஸ்கோடா கார்களுக்கான பரவமழை கால சிறப்பு சர்வீஸ் முகாம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

கொரோனா பிரச்னை தீவிரமடைந்து வந்த போதிலும், பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விஷயங்களுடன் பல சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றன. அலுவலகப் பணி, வியாபார சம்பந்தமாக மக்கள் வெளியே சென்று வருவது மிகவும் அவசியமாகி உள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

இந்த சூழலை மனதில் வைத்து பருவமழை காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ அறிவித்துள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

ஸ்கோடா கார்களுக்கான பருவமழை சிறப்பு பரிசோதனை முகாம் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை நடக்கிறது. இந்த பரிசோதனை முகாமில், பருவமழை காலத்தில் கார்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான 40 விதமான பரிசோதனைகள் செய்யப்படும்.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

மேலும், இந்த பரிசோதனை முகாமில் பங்கேற்கும் உரிமையாளர்கள் கார்களுக்கு மாற்றப்படும் உதிரிபாகங்கள் மீது 15 சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது. ஆக்சஸெரீகள் மீதும் 15 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

இதுதவிர்த்து, உட்புறத்தில் ஜெர்ம்க்ளீன் எனப்படும் நுண் கிருமி நீக்கம் மற்றும் ஏசி சிஸ்டத்திற்கான பராமரிப்பு மற்றும் கிருமி நீக்க பணிகளும் செய்து தரப்படும். இது தற்போதைய நிலையில் வாடிக்கையாளர்கள் கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ள உதவும்.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

இந்த சிறப்பு பரிசோதனை முகாம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும், அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையும். பருவமழை காலத்தில் கார்களுக்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். இதனை உறுதி செய்யும் விதத்தில், இந்த சிறப்பு திட்டம் அமையும்.

சேமிப்புச் சலுகைகளுடன் ஸ்கோடா கார்களுக்கான பருவமழை கால சர்வீஸ் முகாம் ஆரம்பம்

மேலும், கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள அசாதாரண சூழலை மனதில் வைத்து, அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளுடன் இந்த பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது. சர்வீஸ் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதற்கும், இதர பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தப்படுவர்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has started its monsoon service check-up camp and this time there are more cars expected to come for the camp, due to the lockdown.
Story first published: Wednesday, July 22, 2020, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X