ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முன்பதிவுக்கு முந்துங்கள்!

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்கோடா ஆக்டேவியா காரின் பவர்ஃபுல் மாடலான ஆக்டேவியா ஆர்எஸ் மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த முறை இந்த காருக்கான முன்பதிவு வெகு சீக்கிரத்தில் முடிந்து போனது. பலர் போட்டா போட்டி போட்டு முன்பதிவு செய்து வாங்கினர்.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மெய்சிலிர்த்து போன ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய 2020 ஆக்டேவியா ஆர்எஸ் மாடலை இந்தியாவில் இன்று ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மொத்தமாக 200 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சாதாரண ஆக்டேவியா காரைவிட இந்த மாடலில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் கருப்பு வண்ண பூச்சுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், க்ரில் அமைப்பு, ஏர்டேம் ஆகியவை கவர்ச்சியாக இருக்கின்றன. இந்த காரின் அலாய் வீல்கள் காரின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. பெர்ஃபார்மென்ஸ் டயர்கள் இந்த காரின் மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் உட்புறமும் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகத்துடன் கூடிய ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வெர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் திரை, பிரிமீயம் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் விசேஷ இருக்கைகளுடன் இது ஸ்போர்ட்ஸ் செடான் கார் மாடலாக இருக்கிறது.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகத்திற்கு மிகாதவாறு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 காருக்கு ரூ.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ போன்ற சொகுசு கார்களுக்கு இணையான விலையிலும், செயல்திறனிலும் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Skoda Octavia RS 245 launched at the Auto Expo 2020. The new Skoda Octavia RS 245 is offered with a price tag of Rs 36 lakh, ex-showroom (India). Skoda has confirmed that the Octavia RS 245 will be limited to just 200 units in the Indian market.
Story first published: Wednesday, February 5, 2020, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X