புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிக சவாலான விலையில் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகள் விபரங்களை வேரியண்ட் வாரியாக பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

புதிய ஸ்கோடா ரேபிட் கார் மதிப்புவாய்ந்த மாடலாக மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் வந்துள்ளது. இந்த கார் ரைடர், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ரேபிட் ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 விதமான வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. இந்த கார் விலை மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், பேஸ் வேரியண்ட்டிலேயே போதுமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. வேரியணட் வாரியாக வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

ஸ்டைல் வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.7.49 லட்சம்

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் விலை குறைவான பேஸ் வேரியண்ட்டாக ஸ்டைல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட்டுகள், சைடு ஃபாயில் ஸ்டிக்கர்கள், ஸ்கஃப் பிேட், 15 அங்குல ஸ்டீல் வீல்கள், முன்புற, பின்புற இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட் வசதிகள் உள்ளன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

மேலும், அட்ஜெஸ்ட் வசதியுடன் ஸ்டீயரிங் வீல், புளூடூத், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட் வசதியுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஒன் டச் அப்-டவுன் வசதியுடன் பவர் விண்டோஸ் வசதி, முன்புற, பின்புற இருக்கை பயணிகளுக்காக 12V சார்ஜர்கள்,அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

இந்த காரில் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ரியர் டீஃபாகர், டியூவல் ஏர்பேக்குகள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வேரியண்ட்டில் கேண்டி ஒயிட் மற்றும் கார்பன் ஸ்டீல் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

MOST READ : சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

ஆம்பிஷன் வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.9.99 லட்சம்

பேஸ் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், முன்புற, பின்புற பனி விளக்குகள், ரிமோட் கன்ட்ரோல் பவர் விண்டோஸ் வசதி,15 அங்குல அலாய் வீல்கள், க்ரோம் பூச்சுடன் க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த வேரியண்ட்டில் கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல் மற்றும் டாஃபீ பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, பவர் ஃபோல்டிங் வசதியுடன் ரியர் வியூ மிர்கள், 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், லெதர் உறையுடன் கியர் லிவர், ஹேண்ட் பிரேக் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீல், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ : அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

ஓனிக்ஸ் வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.10.19 லட்சம்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 16 அங்குல அலாய் வீல்கள், கருப்பு வண்ணப் பூச்சுடன் ரியர் வியூ மிரர், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் அமைப்பு, க்ரே மற்றும் கருப்பு வண்ண தீம் கொண்ட லெதரேட் இன்டீரியர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

ஸ்டைல் வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.11.49 லட்சம்

விலை உயர்ந்த வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் இந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோ டிம் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர், 16 அங்குல சில்வர் வண்ண அலாய் வீல்கள், க்ரோம் பூச்சுடன் க்ரில் அமைப்பு மற்றும் கதவு கைப்பிடிகள், பாடி கலர் ரியர் லிப் ஸ்பாய்லர் அமைப்பு, ரியர் டிஃபியூசர் ஆகியவை உள்ளன.

MOST READ : இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

இந்த வேரியண்டில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 4 ஏர்பேக்குகளும் வழங்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டில் பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல் மற்றும் டாஃபீ பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகள் உள்ளன.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

மான்ட்டே கார்லோ எடிசன்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.11.79 லட்சம்

இந்த வேரியண்ட்டில் 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், மான்ட்டே கார்லோ எடிசன் பேட்ஜ், கருப்பு வண்ண க்ரில், ரூஃப் ரெயில்கள் மற்றும் பூட் லிப் ஸ்பாய்லர், கேபினில் சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள், லெதரேட் சீட் கவர்கள், மான்ட்டே கார்லோ எடிசன் ஸ்கஃப் பிளேட்டுகள், இரண்டு ஏர்பேக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

எஞ்சின்

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 18.97 கிமீ மைலேஜை வழங்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே!

மதிப்பு வாய்ந்த தேர்வு

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புவாய்ந்த அமசங்களுடன் புதிய ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் வந்துள்ளது. போட்டியாளர்களைவிட விலை குறைவான தேர்வாகவும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Here are the highlighted features and safety kits available with the new BS6 Skoda Rapid car.
Story first published: Thursday, May 28, 2020, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X