Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் அறிமுகம் எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்
ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் சிறந்த தேர்வாக இருக்கிறது. அண்மையில் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்துள்ள ஸ்கோடா ரேபிட் கார் இதன் ரகத்தில் மிக குறைவான விலை தேர்வாகவும், அதிக மதிப்பையும் வழங்குவதாக அமைந்துள்ளது.

இதனால், ஸ்கோடா ரேபிட் கார் மீது வாடிக்கையாளர்களின் பார்வை மெல்ல திரும்ப துவங்கி இருக்கிறது. ஏனெனில், ஸ்கோடா ரேபிட் காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் சிறந்த செயல்திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் வகையில் இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த சூழலில், ஸ்கோடா ரேபிட் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், போட்டியாளர்களைவிட குறைவாக விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதே காரணம்.

இதுகுறித்த தகவல்கள் இதுவரை யூகத்தின் அடிப்படையில் வெளியானது. ஆனால், தற்போது இதனை ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை வழங்கி உள்ளார். இதனால், வரும் பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்ட்டர்) மாடலும் இணைய உள்ளது உறுதியாகி இருக்கிறது.

தற்போது ஸ்கோடா ரேபிட் கார் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டானது ரைடர், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

விலை உயர்ந்த வேரியண்ட்டில் 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரியர் வியூ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விரைவில் வரும் புதிய ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுடன் ஸ்கோடா ரேபிட் கார் போட்டி போடுகிறது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு நிச்சயம் போதிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீம் பிஎச்பி தளத்தில் வெளியான செய்தியை மூலமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.