ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

ஸ்கோடா ரேபிட் காருக்கு நேரடி தள்ளுபடியாக ரூ.50,000 வரையிலும், பழைய காரை கொடுத்து புதிய ரேபிட் காரை வாங்குவோருக்கு ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மொத்தமாக ரூ.75,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

நடப்பு ஆண்டு காலத்தில் தயாரிக்கப்படும் கார்களை விற்றுத் தீர்க்கும் விதமாக, டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கமான செயலாக உள்ளது. அந்த வகையில், நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் அதிகபட்ச சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களை கவர முற்பட்டு வருகின்றன.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

இந்த நிலையில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது ரேபிட் செடான் காருக்கு அதிகபட்ச சிறப்பு சேமிப்புச் சலுகையை அறிவித்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

ஸ்கோடா ரேபிட் காருக்கு நேரடி தள்ளுபடியாக ரூ.50,000 வரையிலும், பழைய காரை கொடுத்து புதிய ரேபிட் காரை வாங்குவோருக்கு ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மொத்தமாக ரூ.75,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

இதுதவிர்த்து, 6 ஆண்டு காலத்திற்கான வாரண்டி திட்டமும் வழங்கப்படுகிறது. இதில், 5 மற்றும் 6வது ஆண்டுக்கான ரூ.26,250 மதிப்புடைய சிறப்பு வாரண்டியும் அடங்கும்.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புதிய ஸ்கோடா ரேபிட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. தற்போது ரைடர் ப்ளஸ், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.13.29 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

புதிய ரேபிட் காரின் பிஎஸ்-6 மாடலில் வழங்கப்பட்டு வந்த ரைடர் என்ற பேஸ் வேரியண்ட் அண்மையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. இந்த வேரியண்ட் ரூ.7.49 லட்சத்தில் வந்தததால், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த வேரியண்ட்டை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான திட்டமும் ஸ்கோடா வசம் உள்ளது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 999சிசி டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் மாடல் லிட்டருக்கு 18.97 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.24 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி தள்ளுபடி சலுகை!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அசிஸ்ட், ரியர் வியூ மிரர், ஆட்டோமேட்டிக் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda India has announced a set of offers for the Rapid sedan in the market. The Rapid sedan is being offered with benefits of up to Rs 75,000 and other perks during the month of December 2020. The Skoda Rapid is currently the brand's entry-level model sold in the country.
Story first published: Tuesday, December 22, 2020, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X