ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ஸ்கோடா ரேபிட் காரின் விலை குறைவான ரைடர் வேரியண்ட் விற்பனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

கடந்த மே மாதம் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் நீக்கப்பட்டு புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரைடர், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 வேரியண்ட் தேர்வுகள் கொடுக்கப்பட்டன.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இதில், ரைடர் என்ற பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது ஸ்கோடா ரேபிட் கார் மிக மிக சவாலான விலையில் வந்தது.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இதனால், வாடிக்கையாளர்களின் கவனம் ஸ்கோடா ரேபிட் காரின் பேஸ் வேரியண்ட் மீது விழுந்தது. மேலும், இந்த வேரியண்ட்டில் 2 டின் ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, ஆக்ஸ் இன் போர்ட் மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகள் கொடுக்கப்பட்டன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிமோட்லாக்கிங் சிஸ்டம், பவர் விண்டோஸ், டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெற்றன.

மேலும், முன்புற, பின்புற இருக்கைகளு்ககு சார்ஜர்கள், எலெக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இந்த வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டன. அதாவது, பொதுவாக நடுத்தர வகை வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் வசதிகள் இந்த பேஸ் வேரியண்ட்டிலேயே கொடுக்கப்பட்டன.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இதனால், இந்த வேரியண்ட்டை மிக அதிக மதிப்பு கொண்ட மிட்சைஸ் செடான் கார் மாடலாக ரேபிட் காரை நிலைநிறுத்தியது. இதனால், வாடிக்கையாளர்களும் இந்த வேரியணட்டை அடித்து பிடித்து முன்பதிவு செய்தனர். ஸ்கோடா ரேபிட் காரின் மொத்த முன்பதிவில் 30 சதவீதம் இந்த வேரியண்ட்டிற்கு வந்தது.

இந்த சூழலில், ரைடர் வேரியண்ட்டிற்கு அதிக முன்பதிவு குவிந்ததால், உற்பத்தியை மனதில் வைத்து ஸ்கோடா நிறுவனம் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரைடர் வேரியண்ட்டின் மீது காட்டிய ஆர்வத்தை புரிந்து கொண்டு, ரைடர் ப்ளஸ் வேரியண்ட்டை களமிறக்கியது.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இந்த ரைடர் ப்ளஸ் வேரியண்ட்டில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராட்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, பாடி டீக்கெல் ஸ்டிக்கர் அலங்காரம் ஆகியவற்றுடன் களமிறக்கியது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.7.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இதனால், ரைடர் ப்ளஸ் வேரியண்ட்டை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ரைடர் வேரியண்ட்டை முழுமையாக விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். ஸ்கோடா இந்திய இணையதளப் பக்கத்தில் இருந்து தற்போது ரைடர் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ஸ்கோடா ரேபிட் காரின் ரைடர் வேரியண்ட் மிக குறைவான விலையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைத்தது. இந்த காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. இதுவும் அதிக மதிப்பை தந்தது.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ரேபிட் காரின் ரைடர் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளதால், இனி ரைடர் ப்ளஸ் வேரியண்ட்தான் பேஸ் வேரியண்ட்டாக இருக்கும். இந்த வேரியண்ட் ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மேலும், ரேபிட் காரின் ரைடர் ப்ளஸ், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய வேரியண்ட்டுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு தேர்வுகளிலும் கிடைக்கிறது.

ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.9.49 லட்சம் முதல் ரூ.13.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. தற்போதும் ஸ்கோடா ரேபிட் காரின் பேஸ் வேரயண்ட்டுகள் அதிக மதிப்பை தரும் வகையிலேயே அமைந்துள்ளன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has discontinued the base 'Rider' variant of its Rapid sedan offering in the Indian market.
Story first published: Friday, December 11, 2020, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X