மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

சில நாட்களுக்கு முன் 5 புதிய பெயர்களை ஸ்கோட ஆட்டோ நிறுவனம் பதிவு செய்த நிலையில், அடுத்து ஒரு புதிய கார் பெயரை வணிக ரீதியில் பயன்படுத்துவதற்காக பதிவு செய்துள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

புதிய மாடல்கள்

அடுத்த ஆண்டு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பல புதிய கார் மாடல்களை வரிசை கட்ட உள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன் 5 புதிய பெயர்களை வணிக ரீதியில் பயன்படுத்துவதற்காக இந்தியாவில் பதிவு செய்தது. இவை அனைத்தும் எஸ்யூவி வகை மாடல்களுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

புதிய பெயர்

இதைத்தொடர்ந்து, நேற்றும் ஒரு புதிய பெயரை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்தது. ஸ்லேவியா (Slavia) என்ற புதிய பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார் மாடலுக்காக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பதிவு செய்துள்ளது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

பெயர் மாற்றம்

எஸ்யூவி மாடல்கள் கே என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதாக பெயர்களை சூட்டி வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இந்த நிலையில், ஸ்லேவியா என்ற இந்த புதிய பெயரானது அடுத்த தலைமுறை ரேபிட் செடான் காருக்கு சூட்டப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

அர்த பழசு

இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் மிகவும் மதிப்பு மிக்க தேர்வாக இருந்து வருகிறது. இருப்பினும், டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் போட்டியாளர்களுக்கு இணையான அளவில் மாற்றங்கள் செய்யப்படாமல், நீண்ட காலமாக விற்பனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா மீது குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

புதிய தலைமுறை ரேபிட் கார்

இதனை போக்கும் விதமாக, அடுத்த ஆண்டு பிற்பாதியில் அல்லது 2022ம் ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ANB என்ற குறியீட்டுப் பெயரில் புதிய ஸ்கோடா ரேபிட் காரின் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

முற்றிலும் புதிய மாடல்

புதிய ஸ்கோடா ரேபிட் கார் வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும். எனவே, ரேபிட் பெயருக்கு பதிலாக புதிய பெயரை சூட்டி விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கத்தில் ஸ்கோடா உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

எஞ்சின் மாற்றம்

இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்கோடா ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிஎஸ்6 எஞ்சினுடன் வந்தது. வெளிப்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாவிட்டாலும், கூடுதல் வசதிகளுடன் வந்தது. குறிப்பாக, பழைய பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் தூக்கப்பட்டு புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்தது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

பவர்ஃபுல் கார்

இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. மேலும், விலையும் சிறப்பாக நிர்ணயிக்கப்பட்டதால், விற்பனையிலும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

மேலும் ஒரு புதிய பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஸ்கோடா... அப்போ சரவெடி காத்திருக்கு!

எஞ்சின் தேர்வு

இதே எஞ்சின் அடுத்து வர இருக்கும் புதிய தலைமுறை ரேபிட் காரிலும் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா, கரோக் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has trademarked yet another nameplate in India, called the 'Slavia'. This time, however, the new nameplate could be for the next-generation Skoda Rapid sedan, which will make its way to India in the near future.
Story first published: Tuesday, December 15, 2020, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X