புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் அண்ட் க்ளெமென்ட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டானது மூன் ஒயிட், ரேஸ் புளூ, ஸ்டீல் க்ரே வண்ணத் தேர்வுகளிலும், லாரின் அண்ட் க்ளெமென்ட் வேரியண்ட்டானது லாவா புளூ, மேஜிக் புளூ, மேக்னெட்டிக் பிரவுன், பிசினஸ் க்ரே மற்றும் மூன் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் பரிமாணத்தில் சற்றே பெரிதாக மாறி இருக்கிறது. பழைய மாடல் 4,861 மிமீ நீளம் கொண்டிருந்த நிலையில், புதிய மாடலானது 4,869 மிமீ நீளம் கொண்டதாக அதிகரித்துள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய க்ரில் அமைப்பு, மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக மாறி இருக்கின்றன. லாரண்ட் அண்ட் க்ளெமென்ட் வேரியண்ட்டில் விசேஷ பேட்ஜ் கொடுக்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு விதமான டிரைவிங் மோடுகளும் உள்ளன.

MOST READ: 80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டாங்க

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 239 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பு மற்றும் செயல்திறன் வல்லமையையும் பெற்றிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 15.10 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் வழங்கப்படுகிறது. லாரண்ட் அண்ட் க்ளெமென்ட் வேரியண்ட்டில் பீஜ் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்படுகிறது.

MOST READ: ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் 8 ஏர்பேக்குகள், மல்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

MOST READ: புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டிற்கு ரூ.29.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எல் அண்ட் கே வேரியண்ட்டிற்கு ரூ.32.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched Superb Facelif model in India at Rs 29.99 lakh (ex-showroom). It is available in two variants and 3 colors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X