புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவில் அறிமுக செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கொரோனா பிரச்னையால் பல கார் நிறுவனங்கள் புதிய கார் அறிமுக நிகழ்வுகளை ஒத்தி போட்டு வருகின்றன. இந்த சூழலில், ஸ்கோடா நிறுவனம் அதிரடியாக தனது புதிய சூப்பர்ப் பிரிமீயம் செடான் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

வரும் 28ந் தேதி புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த காரை திட்டமிட்டபடி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொலிவுடன் க்ரில் அமைப்பு, முழுமையான எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள் ஆகியவற்றுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், முன்பைவிட அதிக வசீகரமாகவும், கூடுதல் மதிப்புமிக்க விஷயங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

உட்புறத்திலும் மாற்றங்களும், கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. தொடுதிரையுடன் மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மெனஅட் சிஸ்டம், வெர்ச்சுவல் காக்பிட் முறையில் தகவல்களை காட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் 360 டிகிரி கேமராவும் கொடுக்கப்ப்டடு இருக்கிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

பழைய மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இவை பிஎஸ்6 தரத்திற்கு ஒப்பாக மேம்படுத்தப்படவில்லை என்பதுடன் நீக்கப்பட்டுவிட்டன.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் டொயோட்டா கேம்ரி, ஹோண்டா அக்கார்டு ஆகிய கார்களுடன் போட்டி போடும். பிரிமீயம் செடான் கார் வாங்க விரும்புவோருக்கு அதிக மதிப்புமிக்க தேர்வாக இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
The Skoda Superb facelift is expected to launch in India on April 28. The flagship sedan from the brand will feature design changes, updated powertrain, and a new price tag.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X