Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது இந்தியா வரும்?
ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற கேள்விக்கு அந்நிறுவனத்தின் தலைவர் பதில் அளித்துள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக என்யாக் அண்மையில் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB மோடுலர் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மிக செயல்திறன் மிக்கதாகவும், 510 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும் பேட்டரியுடன் வர இருக்கிறது.

இதனால், இந்த எஸ்யூவி உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், என்யாக் எஸ்யூவி எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற கேள்விக்கு அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் பதில் அளித்துள்ளார்.

அதில், அடுத்த ஆண்டு மத்தியில் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போதை நிலையில் என்யாக் எஸ்யூவியை இந்தியா கொண்டு வருவது குறித்து தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, என்யாக் எஸ்யூவியை கொண்டு வருவது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை சூசகமாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், என்யாக் எஸ்யூவி உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை இந்தியாவில் வலுவான நிலையை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது. எனவே, என்யாக் எஸ்யூவியை கூடிய விரைவில் கொண்டு வருவதற்கு ஸ்கோடா நிறுவனம் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா என்யாக் எஸ்யூவியானது 4,649 மிமீ நீளமும், 1,879 மிமீ அகலமும், 1,616 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,765 மிமீ ஆக உள்ளது. இந்த கார் 585 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற்றிருக்கிறது.

இந்த எஸ்யூவியில் எல்இடி பேக்லிட் ஒளிரும் அமைப்புடன் க்ரில் அமைப்பு, பெரிய சக்கரங்கள் இதற்கு வலிமையான தோற்றத்தை தருகிறது. இந்த எஸ்யூவியில் பல்வேறு விதமான செயல்திறன் கொண்ட வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. மேலும், மூன்றுவிதமான ரியர் வீல் வேரியண்ட்டுகள் மற்றும் இரண்டு 4 வீல் டிரைவ் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

இந்த எஸ்யூவியானது 148 எச்பி பவர் முதல் 306 எச்பி பவரை வழங்கும் வகையில் பல்வேறு வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இதன் ஆர்எஸ் மாடலானது மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும்.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் எஸ்யூவியின் 55kWh பேட்டரி மாடலானது 340கிமீ தூரம் வரையில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் 82kWh பேட்டரி மாடலானது 510 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.