Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கோடாவின் விஷன் இன் காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகத்திற்கு ரெடி!! 2021ல் விற்பனைக்கு வருகிறது
தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஸ்கோடா விஷன் இன் காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விஷன் இன்-ஐ சார்ந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்திய சந்தைக்காக ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியால் உருவாக்கப்பட்ட எம்க்யூபி ஏ0-இன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் தயாரிப்பு பணியில் இருப்பதை உறுதி செய்திருந்த ஸ்கோடா நிறுவனம் ஷோரூம்களுக்கு 2021ஆம் ஆண்டின் மத்தியில் அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனையில் கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளதால் காரின் தோற்றத்தை பற்றி ஆராய்வது இப்போதைக்கு சீக்கிரமே. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் மிகவும் நேர்த்தியான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதன் தோற்றத்தில்தான் விற்பனைக்குவரும் ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரும் இருக்கும் என்றாலும், சிறிது வேறுபடும். காரின் முன்பக்கத்தில் ஸ்கோடாவின் அடையாளமான இரட்டை செங்குத்து ஸ்லாட்களுடன் பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில், எல்இடி ஹெட்லேம்ப்கள் கீழே இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவற்றை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இவற்றுடன் அகலமான ஏர்டேம் மற்றும் பொனெட்டில் மஸ்குலர் லைன்களையும் பார்க்க முடியும். டுஷர் அட்ரே என்ற யுடியூப் சேனலின் மூலம் கிடைத்துள்ள இந்த லேட்டஸ்ட் ஸ்பை வீடியோவில் கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் சோதனை காரில் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் தற்காலிகமானதாகவே இருக்கும். விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்கள் மேற்கூரையில் வால்களை பெறவுள்ளதை என்பதை முந்தைய ஸ்பை படங்கள் வெளிக்காட்டி இருந்தன.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், சறுக்கலான மைய கன்சோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள் மற்றும் இபிடியுடன் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றுடன் ப்ரீமியம் தரத்திலான கேபினை இந்த ஸ்கோடா காரில் எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் மாடலை சார்ந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பிஎஸ்6 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் கரோக்கில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்படலாம். அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த எஸ்யூவி காரின் அதிகாரப்பூர்வ பெயரை ஸ்கோடா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்தியாவில் இந்த செக் குடியரசு நாடு தனது வருங்கால தயாரிப்புகளுக்காக கோனார்க், க்ளிக், கார்மிக், கோஸ்மிக் மற்றும் குஷக் என்ற ஐந்து பெயர்களை பதிவு செய்து கொண்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றுதான் விஷன் இன் கான்செப்ட்டிற்கு வழங்கப்படும்.