செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

மும்பை- புனே நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தின்போது ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

இந்திய சந்தையில் வரவேற்பை பெற்றுவரும் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக அவற்றின் அதே அளவுடைய க்ராஸ்ஓவர் காரை இந்தியாவிற்கு கொண்டுவர ஸ்கோடா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

இந்த வகையில் ஐரோப்பிய காமிக் வெர்சனின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கோடா விஷன் இன் காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் விளைவாக உருவான எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் முதல் கார்களாக வெளிவரவுள்ளன.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

இதில் ஸ்கோடா க்ராஸ்ஓவரின் இந்திய வருகை மிக தொலைவில் இல்லை. இதை தான் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களும் வெளிக்காட்டுகின்றன. ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்களில் சோதனை கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

இருப்பினும் க்ரில் அமைப்பு மற்றும் எளிமையான பம்பரின் மூலமாக இந்த சோதனை காரின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் டிசைன் தத்துவம் பயன்படுத்தப்பட்டிருப்பதை தெளிவாக அறிய முடிகிறது. இரட்டை-ஹெட்லேம்ப் அமைப்பில் மேற்பாகம் பெரியதாக உள்ளது. அதுவே ஐரோப்பிய-காமிக்கில் அது சற்று சிறியதாக இருக்கும்.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

இந்த சோதனை ஓட்டத்தில் இருந்து காரின் உட்புற கேபினின் ஸ்பை படமும் கிடைத்துள்ளது. அதில் கார், விற்பனை மாதிரியின் டேஸ்போர்டை கொண்டுள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான பாகங்கள் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த உட்புற லேஅவுட், ஐரோப்பிய-காமிக் காரை தான் ஒத்து காணப்படுகிறது.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

ஸ்கோடா நிறுவனம் விஷன் இன் காம்பெக்ட் எஸ்யூவி காரை ப்ரீமியம் தரத்தில் நிலைநிறுத்தவுள்ளதால் இந்த காரில் வண்ண நிறத்தில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை எதிர்பார்க்கலாம். இந்தியாவிற்கான புதிய ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரில் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

செல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால்!! ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை

இதனுடன் மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்களுக்காக சிறிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வையும் ஸ்கோடா நிறுவனம் வழங்கலாம். ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Vision IN SUV Spied In Detail – Creta, Seltos Rival On Track For 2021 Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X