ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடலை பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. என்யாக் ஐவி என பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய முழு தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

ஸ்கோடா முதல் எலக்ட்ரிக் மாடலாக மட்டுமில்லாமல் புதிய என்யாக் ஐவி க்ராஸ்ஓவர் மாடல் இந்நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் எம்இபி எலக்ட்ரிக் வாகன ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் முதல் ஸ்கோடா காராகவும் விளங்கவுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

இதற்கிடையில் தற்போது இந்த என்யாக் எலக்ட்ரிக் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ள படங்களை ஸ்கோடா நிறுவனம் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை பற்றி கூறவேண்டுமென்றால், என்யாக் எலக்ட்ரிக் மாடல் கூபே வடிவில் இல்லாமல், பெரிய வேகான் தோற்றத்தை பெற்றுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள முழு-எலக்ட்ரிக் ஐடி4 காருடன் எலக்ட்ரிக் பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ள இந்த க்ராஸ்ஓவர் கார் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் உருவாக்கும் இரண்டாவது எலக்ட்ரிக் வாகனமாகும்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

பரிமாண அளவுகளின்படி ஸ்கோடா என்யாக் மாடலின் நீளம் 4,648மிமீ, அகலம் 1,877மிமீ, உயரம் 1,618மிமீ மற்றும் வீல்பேஸ் அளவு 2,765மிமீ ஆகும். இவற்றுடன் பின்புற இருக்கைகளுக்கு பின்புறத்தில் 585 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு என்யாக் மாடல் மூன்று வடிவங்களில் பேட்டரி தொகுப்புகளை பெறவுள்ளது. இதில் 340கிமீ ரேஞ்சை வழங்கக்கூடிய 55 kWh பேட்டரியும் அடங்கும். எண்ட்ரீ-லெவல் மாடலான இதில் ஆற்றலை பின்சக்கரத்திற்கு வழங்கக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் காரின் பின்புறத்தில் வழங்கப்படவுள்ளது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 146 பிஎச்பி பவரை பெற முடியும். இதன் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 390 கிமீ ரேஞ்சை வழங்கக்கூடிய 62 kWh பேட்டரி பொருத்தப்படவுள்ளது. இதன் மூலமாக 177 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக பெற முடியும்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

மூன்றாவது பேட்டரி தேர்வாக 500 கிமீ ரேஞ்சை வழங்கக்கூடிய 82 kWh பேட்டரி வழங்கப்படவுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாருடன் காரின் பின்புறத்தில் பொருத்தப்படவுள்ள இந்த பேட்டரியின் மூலமாக அதிகப்பட்சமாக 201 பிஎச்பி பவரில் காரை இயக்க முடியும்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

இவற்றுடன் மொத்தமாக 460 கிமீ ரேஞ்சை பெறும் வகையில் அனைத்து-சக்கர உள்ளமைவில் ட்யூல் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் அமைப்பிலும் என்யாக் காரை பெற முடியும். இந்த ட்யூல் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் செட்அப் 261 பிஎச்பி மற்றும் 302 பிஎச்பி என்ற இரு விதமான ட்யூன்களில் ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

ஆர்எஸ் பேட்ஜ் உடன் விற்பனை செய்யப்படவுள்ள 302 பிஎச்பி வேரியண்ட் தான் ஸ்கோடா நிறுவனத்தின் ஆற்றல்மிக்க தயாரிப்பாக விளங்கவுள்ளது. 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த வேரியண்ட் அதிகப்பட்சமாக 180 kmph என்ற வேகத்தில் இயங்கும்.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

இதில் அனைத்து பேட்டரி தேர்வுகளுடனும் 50kW சார்ஜர் நிலையாக வழங்கப்படவுள்ளது. இருப்பினும் 82 kWh பேட்டரி ரேபிட் சார்ஜர் மூலமாக முழுவதும் நிறைவடைய 1.5 மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும். அதுவே 125kW சார்ஜரில் இந்த பேட்டரி 10%-லிருந்து 80% நிறைவடைய வெறும் 40 நிமிடங்களே போதுமானது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

மற்றப்படி என்யாக் க்ராஸ்ஓவர் மாடலின் உட்புறம் குறித்த எந்த தகவலையும் ஸ்கோடா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் விஷன் இன் கான்செப்ட்டின் அடிப்படையில் இதன் உட்புற கேபினை எதிர்பார்க்கலாம். இதனால் இதன் உட்புறத்தில் முழு-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல்... புகைப்படங்கள் வெளியானது...!

ஸ்டேரிங் வீல் கண்ட்ரோல்கள் 2020 ஆக்டேவியா மாடலில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். ஸ்கோடாவின் ம்லாடா போலேஸ்லாவ் தொழிற்சாலையில் இந்த வருடத்தின் இறுதியில் இருந்து இந்த எலக்ட்ரிக் மாடலின் தயாரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ள இந்நிறுவனம் இந்த காரை அடுத்த வருட துவக்கத்தில் சர்வதேச சந்தைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda’s First Fully-Electric Crossover Enyaq Teased, More Details Inside
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X