இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

ஸ்மார்ட் ஃபார்ஃபோர் (Forfour) எலக்ட்ரிக் கார் பெங்களூர் சாலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாட்டுடைய கார் இது? யார் தயாரிப்பது என்பது போன்ற விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த வாட்ச் கம்பெனி ஒன்றிற்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கும் இடையேயான கூட்டணியில் உருவான ஐரோப்பிய கார் பிராண்ட் தான் ஸ்மார்ட் ஆகும்.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

ஆனால் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இல்லை. இதனால் ஸ்மார்ட் பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ள ஃபார்டூ மற்றும் ஃபார்ஃபோர் என்ற இரு ஹேட்ச்பேக் கார்களும் நம் நாட்டில் விற்பனையில் இல்லை.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

அப்படியிருக்க, தனியார் பதிவெண் உடன் ஸ்மார்ட் ஃபார்ஃபோர் கார் ஒன்று பெங்களூருவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஷோரூம் ஒன்றின் அருகே ரஷ்லேன் செய்திதளத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. காரில் எந்த இடத்திலும் எந்தவொரு ஆவணமும் ஒட்டப்பட்டுள்ளதுபோல் பார்க்க முடியவில்லை.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

இதனால் இந்த கார் பெரும்பாலும் எதாவது ஒரு நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளான உட்புற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் முக்கியமான ஆராய்ச்சி & மேம்பாட்டு இந்தியா அமைப்பு ஒன்று பெங்களூருவில் உள்ளது.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

அந்த அமைப்பிற்கு ஸ்மார்ட்-ஐ போன்று மெர்சிடிஸ் பிராண்டை சொந்தமாக கொண்டுள்ள டைம்லர் க்ரூப்பின் வெளிநாட்டு அதிகாரிகள் யாராவது வந்திருக்கலாம். அவர்களுக்கான போக்குவரத்திற்காக இந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் 5-இருக்கை, மைக்ரோ-க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் கார் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

இதற்காகவே இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியாவில் ஸ்மார்ட் பிராண்ட் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், இது காரின் சோதனை ஓட்டமாக இருக்க முடியாது.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

2014ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் ஃபார்ஃபோரின் தற்போதைய தலைமுறை அதன் ப்ளாட்ஃபாரத்தை ரெனால்ட் டுவிங்கோ என்ற சிறிய ரக கார் உடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் ஸ்மார்ட் ஃபார்ஃபோரின் டாப் வேரியண்ட்களுக்கு கூடுதலாக 0.9 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

இது அதிகப்பட்சமாக 90 பிஎச்பி ஆற்றலில் காரை இயக்க போதுமானதாக உள்ளது. இதுமட்டுமின்றி 82 பிஎச்பி பவரில் இயங்கக்கூடிய முழு எலக்ட்ரிக் வெர்சனிலும் ஃபார்ஃபோர் கார் ஸ்மார்ட்டின் சொந்த நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இப்படிப்பட்ட கார் எல்லாம் இருக்கா? பெங்களூருவில் காட்சித்தந்த ஸ்மார்ட் ஃபார்ஃபோர் எலக்ட்ரிக் கார்

தற்போது பெங்களூருவில் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது ஃபார்ஃபோரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் என தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவிற்கு மாருதி இக்னிஸ் எப்படி உள்ளது அதேபோன்று ஐரோப்பாவிற்கு ஸ்மார்ட் ஃபார்ஃபோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்மார்ட் #smart
English summary
Smart ForFour Electric Car Spotted In Bangalore. Near Mercedes Showroom
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X