இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

இந்தியாவின் முதல் வயல் வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் டிராக்டர் டைகர் எலக்ட்ரிக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் டிராக்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

லக்‌ஷ்மண் தாஸ் மிட்டால் என்பவரால் நடத்தப்பட்டுவரும் இந்திய டிராக்டர் தயாரிப்பு நிறுவனம், சோனாலிகா. இந்த நிறுவனத்தில் இருந்துதான் டைகர் எலக்ட்ரிக் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் டிராக்டர் ஐரோப்பாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

இயக்க ஆற்றலை வழங்க டைகர் எலக்ட்ரிக்கில் ஐபி67-க்கு இணக்கமான 25.5 கிலோவாட்ஸ் நேச்சுரல் கூலிங் காம்பெக்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் இயக்க செலவு வழக்கமான டீசல் டிராக்டர்களை காட்டிலும் நான்கில் ஒரு பங்கு மட்டுமே என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

வழக்கமான வீட்டு உபயோக மின்சாரத்தை வைத்தே இதன் பேட்டரியை 10 மணிநேரத்தில் முழு சார்ஜ் ஏற்றிவிடலாம். டைகரின் எலக்ட்ரிக் மோட்டார் எப்போதும் 100 சதவீத டார்க் திறனை வெளிப்படுத்தும் என இந்த மோட்டாரை வடிவமைத்த ஜெர்மன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.5.99 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள டைகர் எலக்ட்ரிக் டிராக்டருக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் ஏற்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

இந்த எலக்ட்ரிக் டிராக்டரின் அறிமுகம் குறித்து சோனாலிகா க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் ராமன் மிட்டால் கருத்து தெரிவிக்கையில், சோனாலிகாவின் புலம் தயார் டைகர் எலக்ட்ரிக் டிராக்டர், நாளைய பசுமையான இந்தியாவின் போக்குவரத்தை விரைவாக கொண்டுவருவதற்கும், 2030க்குள் இவிகளை அறிமுகப்படுத்துவதற்கான இந்திய அரசின் லட்சிய நடவடிக்கைக்கும் எங்களது பங்களிப்பாகும் என்றார்.

இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

வாகனம் சூடாகாது, பாகங்கள் குறைவு என்பதால் இயக்கத்தின்போது அதிர்வும் குறைவு மற்றும் எளிதில் பழுதடையாத பாகங்களினால் டைகர் எலக்ட்ரிக் விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று சோனாலிகா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விவசாயத்திற்கான எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகமானது!! விவசாயிகளும் இனி எலக்ட்ரிக் வாகனத்தில்..

அதிகப்பட்சமாக மணிக்கு 24.93 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் டிராக்டரை 2 டன் எடையுடைய ட்ராலியுடன் இயக்கினாலும் இதன் பேட்டரி சுமார் 8 மணிநேரத்திற்கு இயங்கும். பேட்டரியை விரைவு சார்ஜர் மூலம் வெறும் 4 மணிநேரத்தில் முழுவதும் நிரப்பி விடலாம்.

Most Read Articles

மேலும்... #சோனாலிகா #sonalika
English summary
Sonalika Launches India's First Field Ready Electric Tractor - Tiger Electric
Story first published: Wednesday, December 23, 2020, 18:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X