சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

யாரும் எதிர்பாராத வகையில், புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை மின்னணு சாதன தயாரிப்பில் பிரபலமான சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி(CES) நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில், கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்களும் வெளியிடப்படுவது வழக்கம். எனவே, சிஇஎஸ் கண்காட்சி மீது கார் தயாரிப்பு துறையினர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

வழக்கம்போல் இந்த மின்னணு சாதன கண்காட்சியில் கார் சம்பந்தப்பட்ட ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சூழலில், டிவி, ஸ்மார்ட்ஃபோன், கேமரா மற்றும் வீடியோ கேம் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் சோனி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

சோனி விஷன் எஸ் கான்செப்ட் என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரி மாடலை காட்சிப்படுத்தி உள்ளது சோனி நிறுவனம். சோனி விஷன் எஸ் கான்செப்ட் மாடலின் முன்புறம் போர்ஷே கார்களின் டிசைன் அம்சங்களை நினைவூட்டுவதாக உள்ளது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

சோனி விஷன் எஸ் கான்செப்ட் கார் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உட்புறமும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்தியதாகவும், அதிக இடவசதியுடன் வேற லெவலில் காட்சியளிக்கிறது. டேஷ்போர்டு முழுவதும் பல மின்னணு திரை அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இந்த கார் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இந்த கார் குறித்த தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அரை நிமிடத்தில் இந்த கார் அறிமுக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டதே காரணம்.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

அதாவது, இந்த கார் குறித்த தகவல்களை தற்போது வெளியிட சோனி நிறுவனம் விரும்பவில்லை. எனினும், எதிர்காலத்திற்கு தேவையான சிறந்த போக்குவரத்து தீர்வாக இந்த மின்சார காரை குறிப்பிடுகிறது சோனி நிறுவனம்.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

இந்த எலெக்ட்ரிக் காரில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் 33 சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, பல்வேறு தானியங்கி கட்டுப்பாட்டு வசதிகளையும், பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

பின்புற இருக்கைகளுக்கும் டிவி திரைகள், ஆர்ம் ரெஸ்ட்டில் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் நேரடி இன்டர்நெட் வசதியுடன் பல்வேறு செயலிகள் இயக்க முடியும்.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

சோனி விஷன் எஸ் கான்செப்ட் மாடலை ஆட்டோமொபைல் துறை நிறுவனமான மேக்னா உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

மேலும், லிடர் மற்றும் டைம் ஆஃப் ப்ளைட் கேமரா தொழில்நுட்பங்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து எதிர்கால போக்குவரத்து சாதனங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்ட உள்ளது சோனி. சாதாரண தொழில்நுட்ப முறையில் படங்களை உணர்ந்து செயல்முடியாத வேளையில், சி மாஸ் சென்சார்கள் மூலமாக கண்டறியும் தொழில்நுட்பத்தையும் கார்களுக்காக உருவாக்க சோனி திட்டமிட்டுள்ளது.

சர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்!

சோனி உருவாக்கி வரும் புதிய லிடர் தொழில்நுட்பம் மூலமாக காரை சுற்றிலும் உள்ள வாகனங்கள், தடைகள், விலங்குளை முப்பரிமாண முறையில் கண்டறிந்து பாதுகாப்பாக இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். டைம் ஆஃப் ப்ளைட் தொழில்நுட்பம் மூலமாக கேபினில் உள்ள பயணிகள் மற்றும் பொருட்களை உணர்ந்து கொண்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கை அசைவு கட்டுப்பாட்டு வசதிகளுக்கும் இந்த தொழில்நுட்பம் உதவும்.

Most Read Articles
English summary
apanese multinational conglomerate, Sony Corporation, dropped hat could be 'the biggest moment of the year'. The electronics and gaming giants unveiled the all-electric Sony Vision-S Concept car at the Consumer Electronic Show 2020.
Story first published: Thursday, January 9, 2020, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X