பிரபல கார் நிறுவனம் செய்த செயல்! மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல் நிறுவனங்கள்! அப்படி என்ன நடந்துச்சு?

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் சோனி, ஜேபிஎல், போட் மற்றும் ஸ்கல்கேண்டி உள்ளிட்ட நிறுவனங்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில வாகன உற்பத்தியில் மட்டுமே இன்றி பிற பொருட்களின் தயாரிப்பிலும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளன. அந்தவகையில், கடந்த காலங்களில் வாகன நிறுவனங்கள் சில ரைடர்களுக்கு தேவையான உடை மற்றும் அணிகலன்களை விற்பனைக்குக் களமிறக்கியதைப் பற்றி நாம் பார்த்திருக்கின்றோம்.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

இந்த நிலையில், பிரபல சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினி இசை பிரியர்களைக் கவரும் வகையில் இயர்போன்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உருவாக்குவதற்காக நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிராண்ட் மாஸ்டர் மற்றும் டைனமிக் ஆகிய நிறுவனங்களுடன் அது அண்மையில் கூட்டணியைத் தொடங்கியது.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

vலம்போர்கினி நிறுவனத்தின் இந்த செயலால் இயர்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் போட், செனைசர், ஸ்கல்கேண்டி, சோனி மற்றும் ஜேபிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. இந்த நிறுவனங்களின் இசையொலிப்பான்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இவர்களுடன் போட்டியிடும் வகையில் லம்போர்கினி ப்ளூடூத் ஒயர்லெஸ் இசையொலிப்பான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

பிராண்ட் மாஸ்டர் மற்றும் டைனமிக் ஆகிய நிறுவனங்களுடனான கூட்டணியிலேயே தன்னுடையக் கார்களைப் போன்று பிரீமியம் ரகத்திலான இயர் போன்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இசைப் பிரியர்களையும், தன்னுடைய வாடிக்கையாளர்களையும் கவரும் நோக்கில் இந்த நவீன இசை ஒலிப்பான்களை அது முதல் முறையாக வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

ஒயர்லெஸ் ஹெட்போன் மற்றும் இயர்போன்கள் ஆகிய இரு ரக இசை ஒலிப்பான்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தனித்துவமாக லம்போர்கினி நிறுவனத்தின் லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மூன்று விதமான கண்கவர் நிறத் தேர்விலும் இவை கிடைக்க இருக்கின்றன. அவை, வெள்ளி உலோகம் / வெளிர் சாம்பல் / மஞ்சள் அல்காண்டராவில் ஆகிய நிறத் தேர்வுகள் ஆகும்.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

இத்துடன், கூடுதல் நிறத் தேர்வையும் லம்போர்கினி இந்த இசையொலிப்பான்களில் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நிறங்கள் லம்போர்கினி தயாரித்து வரும் கார்களின் இன்டீரியர் பகுதி நிறத்திற்கு ஒத்தவையாக காட்சியளிக்கின்றன. ஆகையால், லம்போர்கினி பயனர்கள் அவர்களின் காருடைய இன்டீரியர் நிறத்திற்கு ஏற்ப தங்களுக்கான இயர்போன்களை தேர்வு செய்துகொள்ள முடியும்.

பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு!

இந்த ப்ளூடூத் இயர்போன்களை 30 மீ/100 அடிகள் தூரத்தில் இருந்தும் இணைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது. இதில், 5.0 வெர்ஷன் ப்ளூடூத் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், நீடித்து உழைக்கும் பேட்டரிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. அது, 24 நேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது.

Most Read Articles

English summary
Supercar Maker Lamborghini Unveils Lambo Headphones. Read In Tamil.
Story first published: Saturday, November 21, 2020, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X