மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்..!

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல் ஸ்டைலில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னி காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் ஆஃப்-ரோடர் வாகனமாகும். எனவே, இந்திய ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மத்தியில் இந்த கார் அதிக ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மாடலின் நான்காம் தலைமுறையை சுசுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் ஒரு முறை அறிமுகம் செய்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

அப்போதிலிருந்தே உலக நாடுகள் பலவற்றில் இந்த காருக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இந்த காரின்மீதுள்ள கூடுதலாக்கின்ற வகையில் பிரபல வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் காரான ஜி-வேகன் மாடலுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

இந்த தரமான சம்பவத்தை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் நிறுவனம் செய்திருக்கின்றது. தொடர்ந்து, அந்த மாடிஃபை செய்யப்பட்ட காருக்கு ஏரூவர் ஜி 62 என்ற பெயரையும் வைத்துள்ளது.

சாதாரணமாகவே, சுசுகி ஜிம்னி மிக சிறந்த தயாரிப்பாக காட்சியளிக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

குறிப்பாக, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், சிறந்த எஞ்ஜின் திறன் மற்றும் ஆல் வீல் டிரைவிங் சிஸ்டம் என அனைத்திலும் அசாத்தியமானதாக காட்சியளிக்கின்றது. இதனை கூடுதல் சிறப்பாக்கும் வகையில் புதிய மாடிஃபிகேஷன் அமைந்திருக்கின்றது. மேலும், புதிய பேனல்கள் மற்றும் மாடிஃபிகேஷன்களால் அழகான லக்சூரி காராக ஜிம்னி மாறியிருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

மாடிஃபிகேஷனுக்காக ஜிம்னியின் அனைத்து உடற்கூடுகளும் ஜி-கிளாஸ் காருக்கு இணையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சுசுகியின் லோகோக்கள் போன்ற ஒரு சில அம்சங்கள் மட்டும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேசமயம், அந்த எஸ்-பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும் க்ரில்லானது ஜி-வேகன் காரில் இருப்பதைப் போன்றதாக உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

மேலும் ஹெட்லேம்ப், பக்கவாட்டு பகுதி கதவுகள், மேற்கூரை, பின் பக்க விளக்கு, ஸ்பேர் வீல் மற்றும் பக்காவட்டு பகுதியில் சுலபமாக ஏறி செல்வதற்கு ஏதுவாக படிகட்டு அமைப்பு உள்ளிட்டவை பென்ஸ் ஜி-கிளாஸ் காரில் இருப்பதைப் போன்று ஜிம்னியிலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

இதனால், முழுக்க முழுக்க தனது உண்மையான உருவத்தை இழந்து மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராகவே மாறியிருக்கின்றது சுசுகி ஜிம்னி.

இந்த காரின் புதிய தலைமுறை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

ஆனால், இது சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றது. இரு வேரியண்டுகளில் அது விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அவை, ஸ்டாண்டர்டு மற்றும் சியரா ஆகும்.

இதில், பேஸ் வேரியண்டில் 660சிசி திறனுடைய டர்போ சார்ஜ்ட் 3 சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

இதேபோன்று, உயர் ரக வேரியண்டில் 1.5 லிட்டர் 4 சிலிண்ட்ர எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காராக மாறிய சுசுகி ஜிம்னி.. மாருதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் இதுதான்...

இவையிரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் தேர்வு வழங்கப்படுகின்றது. மேலும், இவை நான்கு வீல் இயக்கம் கொண்டவை ஆகும். ஆகையால், எம்மாதிரியான ஆஃப்-ரோடாக இருந்தாலும் இந்த கார் அசால்ட் செய்துவிடும். இந்த திறனுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக இது 4X4 சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Jimny Modified Into Mercedes Benz G Class. Read In Tamil.
Story first published: Friday, March 27, 2020, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X