7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் விட்டாராவின் 7-இருக்கை வெர்சனை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான சுஸுகி அடுத்த தலைமுறை விட்டாரா எஸ்யூவி காரை 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளாவிய சி-ப்ளாட்ஃபாரத்தை தக்க வைத்து கொண்டு இந்த 2021 மாடல் வெளிவருகிறது.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

இதனுடன் விட்டாரா பெயர்பலகையை நிறுத்தி கொள்ள சுஸுகி விரும்பவில்லை போலும். ஏனெனில் க்ராண்ட் விட்டாரா என்ற பெயரில் புதிய சுஸுகி கார் வெளிவரவுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதவிர்த்து காரை பற்றிய வேறெந்த தகவலையும் இப்போதைக்கு பெற முடியவில்லை.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

புதிய கிராண்ட் விட்டாரா ஆஃப்-ரோடு திறன்களுடன் தற்போதைய விட்டாராவின் 7-இருக்கை வெர்சனாக இருக்கலாம். கூடுதலாக பொருத்தப்படும் மூன்றாவது வரிசைக்காக காரின் நீளம் நிச்சயம் அதிகரிக்கப்படும். இந்த 7-இருக்கை வெர்சன் 2021 விட்டாரா பிரெஸ்ஸாவில் கொண்டுவரப்படவுள்ளது.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

இந்த எஸ்யூவி பெரிய, ஏணி-வடிவ சேசிஸ் மற்றும் ஆஃப்-ரோடு சார்ந்த 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் ஏற்கவுள்ளது. சுஸுகி பொதுவாக பெயர்ப்பலகைகளை கைவிடுவதில்லை என்றும், கிராண்ட் விட்டாரா பிராண்ட் இறந்துவிடவில்லை என்றும் சுஸுகி ஆஸ்திரேலியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

இதனால் விட்டாரா பெயர்பலகையின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்றும், பெரிய மற்றும் திறமையான வாகனமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அடுத்த 2-3 வருடங்களில் 5 புதிய பயன்பாட்டு வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

இந்த 5 புதிய அறிமுகங்களில் முற்றிலும் புதிய நடுத்தர அளவு எஸ்யூவி, புதிய சி-பிரிவு எம்பிவி, புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா, புதிய காம்பெக்ட் க்ராஸ்ஓவர் மற்றும் 5-கதவு ஜிம்னி எஸ்யூவி உள்ளிட்டவை அடங்குகின்றன.

உலகளாவிய விட்டாரா நமது நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படாது. அதற்கு பதிலாக, டொயோட்டாவின் டி.என்.ஜி.ஏ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவியை மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி? எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா?

2022ன் இரண்டாம் பாதியில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. 5-கதவுகள் கொண்ட ஜிம்னி சியாரா 2022ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2023ஆம் ஆண்டின் துவங்கத்திலோ இந்திய சந்தையில் களமிறங்கலாம்.

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
All-New Suzuki Grand Vitara 7-Seater SUV In The Works
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X