மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் பிரபலமான செடான் மாடலாக விளங்கிய ப்ரீமியர் 118 என்இ கார் முழுவதும் மாடிஃபைடு செய்யப்பட்டு தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான தோற்றத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து மோட்ஸ்ஓன்கண்ட்ரீ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

ப்ரீமியர் ஆட்டோமொபைல்ஸ் லிமிடேட் 1980, 90ஆம் காலக்கட்டங்களில் இந்தியாவில் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது. இந்நிறுவனத்தின் பத்மினி காரை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டுமென்றில்லை.

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களை பெற்ற பத்மினி மாடல் மட்டுமின்றி இந்நிறுவனத்தின் 118 என்இ செடான் காருக்கும் அதிகளவில் வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்தது. ஃபியாட் 124 மாடலின் அடிப்படையிலும் பத்மினி காரின் அப்கிரேட் வெர்சனாகவும் வெளிவந்த இந்த செடான் காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டது.

மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

இதனால் 118 என்இ காரை தற்போது குறைந்த அளவில் கூட சாலையில் பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் இத்தனை வருடங்களாக தனது 118 என்இ காரை பாதுகாத்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் காரை மாடிஃபைடு பணிகளுக்கு உட்படுத்தியுள்ளார்.

மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

பழமையான 118 என்இ காரின் வடிவத்தை அப்படியே கொண்டிருந்தாலும், இந்த மாடிஃபைடு காரில் மிகவும் கவனிக்கத்தக்க மாற்றமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் காரை மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்திற்கு கொண்டுவந்துள்ளது.

க்ரில் அமைப்பின் டிசைன் மாற்றப்பட்டதாலும், ஹெட்லேம்ப் யூனிட் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாலும், காரின் முன்பகுதி முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது. ஹெட்லேம்ப் யூனிட்டில் சந்தைக்கு பிறகான ப்ரோஜெக்டர் வகையிலான விளக்குகளை பொருத்தியுள்ளனர்.

மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

முன்புற க்ரில்லிற்கு அடிப்பகுதியில் எல்இடி பார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் லிப் ஸ்பாய்லர், பின்புற சக்கர ஆர்ச் வரையில் பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸ் என இந்த மாடிஃபைடு கார் கஸ்டம் பாடி கிட்டையும் பெற்றுள்ளது. இவற்றுடன் ஃபாக்ஸ் வுட் ஸ்கூப்பும் இந்த காரில் உள்ளது.

பக்கவாட்டு பகுதியை பார்த்தோமேயானால், 15 இன்ச் ஜிடிஆர் மற்றும் யோகோகாமா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர்த்து இந்த மாடிஃபைடு காரின் பக்கவாட்டு பகுதிகளில் வேறெந்த மாற்றங்களையும் காண முடியவில்லை.

மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

அப்படியே பின்பக்கத்திற்கு வந்தால், ஸ்டாக் டெயில்லைட்களுக்கு மாற்றாக சந்தைக்கு பிறகான தெளிவான லென்ஸை கொண்ட எல்இடி யூனிட்கள் தென்படுகின்றன. இதனுடன் ராஜ் ஹிங்கோராணியின் சிக்கலில்லாமல் புகையை வெளியிடும் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தையும் இந்த கார் கொண்டுள்ளது.

மாடர்ன் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு ப்ரீமியர் 118 என்இ செடான் கார்...

உட்புற கேபினில் கே&என் காற்று சுத்திகரிப்பான் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இருக்கைகளை பார்க்க முடிகிறது. இந்த இருக்கைகள் காருக்கு கூடுதல் ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. ‘எப்போதும் கூர்மையான' ஸ்டேரிங் சக்கரத்தால் வழக்கமான 118 என்இ காரின் ஸ்டேரிங் சக்கரம் மாற்றப்பட்டுள்ளது.

இவற்றுடன் காரின் என்ஜின் அமைப்பிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இந்த மாடிஃபைடு மாற்றங்களால் ப்ரீமியர் 118 என்இ செடான் கார் அதன் பழமையான தோற்றத்தை முழுமையாக இழந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த செடான் வெளிநாட்டு சந்தைகளில் ஃபியாட் 124 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
This modified Premier 118 NE sedan looks gorgeous
Story first published: Tuesday, July 21, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X