2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

அல்ட்ராஸ் மாடலின் எலக்ட்ரிக் வெர்சன் காரை முதன்முதலாக இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியிலேயே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த டாடா அல்ட்ராஸ் இவி கார் தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இந்த இவி மாடலின் தோற்றம் அல்ட்ராஸ் காரின் வழக்கமான தோற்றத்துடன் கிட்டத்தட்ட அப்படியே ஒத்துப்போகிறது. டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார், இந்நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தத்துவத்தில் டிசைன் லைன்-ஐ கொண்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

ஜிப்ட்ரான் எலக்ட்ரிக் மோட்டார் உள்பட டாடா நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடல் பெரும்பான்மையான தொழிற்நுட்பங்களை டாடா நெக்ஸான் இவி மாடலில் இருந்து பெற்றுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஏற்ற வகையில் அதிக திறன் வாய்ந்த பேட்டரியை இந்த 2020 இவி மாடலில் எதிர்பார்க்கலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

இதனால் இந்த எலக்ட்ரிக் மாடல் சிங்கிள் சார்ஜில் 300கிமீ-க்கும் மேல் இயங்கும் என கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் மாடலை இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் அறிமுகம் செய்து தற்போது விற்பனை செய்து வருகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

அறிமுகம் முதலே வாடிக்கையாளர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் டாடா அல்ட்ராஸ் எரிபொருள் என்ஜின் மாடல், முதல் மாதத்தில் 4,500 யூனிட் கார்கள் விற்பனையை மார்க்கெட்டில் பதிவு செய்துள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

க்ராஷ் டெஸ்ட் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ள அல்ட்ராஸ் கார், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவரும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

பாதுகாப்பு தொழிற்நுட்பங்களால் எலக்ட்ரிக் மோட்டார் பெரிய அளவில் பாதிப்படையாது என்பதால், அல்ட்ராஸ் மாடலின் இந்த இவி வெர்சன் காரும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பெண்களை பெறலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

2020 டாடா அல்ட்ராஸ் இவி மாடலின் அதிகாரப்பூர்வ விலை பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. டாடா நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடலை ரூ.11-13 லட்ச விலையில் எதிர்பார்க்கலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போ: டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம்..!

2021ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து சந்தையில் விற்பனை செய்யப்ப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் கார், இந்திய சந்தையின் முதல் எலக்ட்ரிக் ப்ரீமியம் ஹேட்ச்பேக் என்ற பெயரை பெறவுள்ளது. விற்பனையில் இந்த காருக்கு போட்டி மாடல்களாக மஹிந்திரா இகேயூவி100 மற்றும் மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் போன்றவை உள்ளன. ஆனால் இவை இரண்டும் ரூ.9 லட்சத்தில் தான் விலையை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Altroz EV Unveiled At Auto Expo
Story first published: Wednesday, February 5, 2020, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X