ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 300 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வகையிலான புதிய எலெக்ட்ரிக் காரை டாடா விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எலெக்ட்ரிக் வேரியண்ட்டை தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் இது லித்தியம் அயான் பேட்டரியை பகிர்ந்து கொள்ளவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

நடப்பாண்டின் இறுதியில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலையை டாடா மோட்டார்ஸ் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 10 லட்ச ரூபாய் என்ற விலையில் இந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

அதேபோல் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த கார் எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணிக்கும்? என்ற விபரமும் வெளியிடப்படவில்லை. எனினும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் லித்தியம் அயான் பேட்டரியை பகிர்ந்து கொள்ள உள்ளதால், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 250-300 கிலோ மீட்டர்களாக இருக்கும் என யூகிக்க முடிகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

இதை விட அதிகமாக இருந்தாலும் கூட இருக்கலாம். ஏனெனில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்கிறது. அதே சமயம் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விரைவாக செயலாற்ற கூடியதாகவும் இருக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 10 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதும், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதும் டாடா மோட்டார்ஸ் சென்று கொண்டிருக்கும் பாதையை காட்டுகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கேப் நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிநபர் பயன்பாட்டு சந்தையிலும் டாடா நிறுவனம் இந்த காரை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர தற்போது நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் உடன் சியரா கான்செப்ட்டையும் டாடா காட்சிக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

இதனிடையே டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரில் பெட்ரோல் மற்றும் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. சமீபத்தில்தான் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தனது முக்கிய போட்டியாளர்களான மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது டாடா அல்ட்ராஸின் விலை சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Altroz EV Showcased At Auto Expo 2020 - India Launch Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X