டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் என்ற புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சரியான விலையில், சிறந்த வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக டாடா அல்ட்ராஸ் பெயர் பெற்றுவிட்டது. விற்பனையிலும் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில் புதிய வேரியண்ட்டை டாடா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

டாடா அல்ட்ராஸ் கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நடுத்தர விலையிலான எக்ஸ்எம் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை சேர்தது எக்ஸ்எம் ப்ளஸ் என்ற வேரியண்ட்டை களமிறக்கி உள்ளது.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய எக்ஸ்எம் ப்ளஸ் வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் செயலிகளை சப்போர்ட் செய்யும். 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் மற்றும் முழுமையான வீல் கவருடன் கிடைக்கிறது. வாய்ஸ் ரெகக்னிஷன் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், கீ லெஸ் என்ட்ரி வசதிகள் உள்ளன.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

இதுதவிர்த்து, டிரைவிங் மோடுகள், பவர் விண்டோஸ், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் உள்ளன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் உள்ளன.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய அல்ட்ராஸ் எக்ஸ்எம் வேரியண்ட்டானது அவென்யூ ஒயிட், மிட்டவுன் க்ரே, ஹைஸ்ட்ரீட் கோல்டு மற்றும் டவுன்டவுன் ரெட் என நான்குவிதமான ஒற்றை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்ட் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ப்ளஸ் வேரியணட் விற்பனைக்கு அறிமுகம்

டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.44 லட்சம் முதல் ரூ.8.79 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதில் எக்ஸ்எம் வேரியண்ட் ரூ.6.31 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எக்ஸ்எம் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.6.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.29,000 கூடுதல் விலையில் இந்த வேரியண்ட்டிற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors has launched the new XM+ variant of the Altroz in Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X