டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் கார் உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அத்துனை அம்சங்களுடன் கார்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். அந்த வகையில், வெளிவந்த புதிய டாடா கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, அந்நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்து வருகின்றன.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு முதல் 9 மாதங்களில் 25,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது டாடா அல்ட்ராஸ் கார். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

கடந்த ஜனவரியில் டாடா அல்ட்ராஸ் காரின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த நிலையில், 25,000மாவது அல்ட்ராஸ் கார் உற்பத்திப் பிரிவில் இருந்து வெளிவந்த நிகழ்வை டாடா மோட்டார்ஸ் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் கார் உள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு இது போட்டியாக இருந்து வருகிறது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் இளம் சமுதாயத்தினரை முதல் பார்வையிலேயே சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல டியூவல் டோன் லேசர் கட் அலாய் வீல்கள் ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கிறது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கதவுகள் 90 டிகிரி கோணத்தில் திறக்கும் வசதி, கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்களில் க்ரோம் அலங்காரம், சி பில்லரில் பின்புற கதவுகளின் கைப்பிடிகள் பொருத்தப்பட்டு இருப்பது, ஸ்பிளிட் வகை டெயில் லைட்டுகள் என ஒவ்வொரு அம்சமும் சிறப்பான தேர்வாக இதனை முன்னிறுத்துகிறது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 4,951 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. விற்பனை தொடர்ந்து சீராக இருந்து வருவதால், டாடா மோட்டார்ஸ் அதிக உற்சாகத்தில் இருந்து வருகிறது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

மிக விரைவில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் டாடா அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

டாடாவின் புதிய நம்பிக்கை நாயகன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்!

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் மாடல்கள் ரூ.5.44 லட்சம் முதல் ரூ.7.89 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.09 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Tata Motors has achieved a new production milestone with their premium hatchback offering, the Altroz. The company recently celebrated the production of their 25,000th Tata Altroz.
Story first published: Tuesday, September 29, 2020, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X