2020 ஹூண்டாய் ஐ20-க்கு போட்டியை தரவுள்ள டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸின் புதிய டர்போ வேரியண்ட்டை இந்த மாதத்திற்கு உள்ளாக இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

இந்திய சந்தையில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நுழைந்த கடைசி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கி வருகிறது. இந்த வகையில் அறிமுகமான டாடா அல்ட்ராஸ் உண்மையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல விற்பனை எண்ணிக்கையை பெற்று கொடுத்து வருகிறது.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

இருப்பினும் ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வு இல்லாததது அல்ட்ராஸிற்கு சிறிய சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நிலை நீண்ட காலத்திற்கு இருக்க போவதில்லை. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரில் விரைவில் டர்போ என்ஜின் தேர்வை கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

இந்த 2020 நவம்பர் மாத இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் அல்ட்ராஸ் டர்போ கார் இந்திய சாலைகளில் சோதனையில் உட்படுத்தப்பட்டதை கடந்த மாதங்களில் பார்த்துள்ளோம். இந்த டர்போ வெர்சன் காரில் நெக்ஸானின் என்ஜின் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

நெக்ஸானின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஆனால் அல்ட்ராஸில் இதே என்ஜின் 110 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

இந்த டர்போ என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. அதேநேரம் 6-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அல்ட்ராஸ் டர்போ காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.99 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

தற்சமயம் அல்ட்ராஸில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இரு என்ஜின்களுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை.

2020 ஹூண்டாய் ஐ20-க்கு எதிர் சேவல் விடும் டாடா மோட்டார்ஸ்!! அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகம்?

அறிமுகமான பிறகு டாடா அல்ட்ராஸ் டர்போ காருக்கு ஹூண்டாய் ஐ20 டர்போ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன. அதிலும் குறிப்பாக விரைவில் இந்தியாவில் களம் காணவுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காருக்கு போட்டியாக தான் டாடா அல்ட்ராஸ் டர்போ இந்த மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Altroz turbo to be launch this month details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X