ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் மாடலின் புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் தயாரிப்பில் இருப்பதை ஏற்கனவே பலமுறை நமது செய்தி தளத்தில் பதிவிட்டுள்ளோம். இந்த நிலையில் இந்த டர்போ வேரியண்ட்டின் மாதிரி கார் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

டாடா ப்ராண்ட்டின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸ் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா, ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹூண்டாய் ஐ20 எலைட் (புதிய தலைமுறை தயாரிப்பு பணியில் உள்ளது) உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினை சமாளித்து வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவு அவ்வளவு பெரியதாக இல்லாவிடினும், விற்பனையில் உள்ள பெரும்பான்மையான மாடல்கள் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை கொண்டிருக்கின்றன. இதில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் போலோ ஜிடி டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோவின் டர்போ பெட்ரோல் வெர்சனான பலேனோ ஆர்எஸ்-ன் விற்பனையை பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படாததால் ஏற்கனவே நிறுத்திவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஜேடிஎஸ்வி ப்ராஜெக்ட்டின் கீழ் வெளிவந்த டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி என்ற இரு டர்போ பெட்ரோல் மாடல்கள் தற்சமயம் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் இந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் சந்தைக்கு வந்த அல்ட்ராஸின் விலை சமீபத்தில் ரூ.15,000 உயர்த்தப்பட்டு இருந்தது. இதனால் அல்ட்ராஸின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.44 லட்சம் என்ற அளவில் உள்ளது. இந்த விலையில் அல்ட்ராஸின் எக்ஸ்இ வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

1.2 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பிஎஸ்6 டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கும் இந்த ஹேட்ச்பேக் கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் (ஒ) என்ற ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்படுகிறது. இவற்றில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

இந்த நிலையில் தற்போது சோதனை ஓட்டத்தின்போது முதன்முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இதன் பிஎஸ்6 டர்போ பெட்ரோல் வேரியண்ட் மறைப்பு எதுவுமின்றி காட்சியளிக்கிறது. டெக்டானிக் ப்ளூ என்ற நிறத்தில் ஜொலிக்கும் இந்த சோதனை காரின் பின்புற டெயில்கேட்டில் டர்போ பெட்ரோல் கார் என்பதை குறிக்கும் விதமாக 'டர்போ' முத்திரை பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது தற்சமயம் விற்பனையில் உள்ள 1.2 ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜினின் திருத்தியமைக்கப்பட்ட வெர்சன் ஆகும். ப்ராண்ட்டின் புதிய டிசிடி சிஸ்டத்துடன் வெளிவரவுள்ள இது 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு என்ஜின் உள்ளிட்ட பாகங்களை கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமேட்டிவ்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இதனால் தான் சமீபத்தில் கூட கோயம்புத்தூரரில் டாடா அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வேரியண்ட் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

Image Courtesy: Ayush Singh/Rushlane Spylane

Most Read Articles
English summary
Tata Altroz Turbo Petrol Variant Spied Undisguised – Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X