டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

இந்தியாவின் பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த தேர்வாக உள்ளது. சவாலான விலை, டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் மதிப்பு வாய்ந்த தேர்வாகவும் உள்ளது. டாடா மோட்டார்ஸ் கார் பிரிவின் விற்பனையிலும் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

தற்போது டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஆப்ஷனல் ஆகிய பல வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தேர்வை கூடுதல் மதிப்பாக்கும் விதத்தில் எக்ஸ்டி என்ற நடுத்தர விலையுடைய வேரியண்ட்டில் கூடுதல் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

இதன்படி, எக்ஸ்டி வேரியண்ட்டில் வழங்கப்படும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வசதி எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஆப்ஷனல் ஆகிய டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது எக்ஸ்டி வேரியண்ட்டில் இந்த வசதி கொடுக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் எக்ஸ்டி வேரியண்ட் ரூ.6.84 லட்சம் விலையிலும், டீசல் எக்ஸ்டி வேரியண்ட் ரூ.8.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. அதேபோன்று, எக்ஸ்இசட் ஆப்ஷனல் பெட்ரோல் வேரியண்ட் ரூ.7.69 லட்சம் விலையிலும், டீசல் எக்ஸ்இசட் ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.9.29 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

இந்த நிலையில், பட்ஜெட் பிரச்னை இருக்கும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்டி வேரிண்ட்டை தேர்வு செய்யும்போது இந்த புதிய வசதியும் அவர்களை கவரும் வகையில் அமையும் என்பதுடன், கூடுதல் பாதுகாப்பு விஷயமாகவும் கருத முடியும். இந்த வேரியண்ட் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

டாப் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் வாஷர் மற்றும் வைப்பர், அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை எக்ஸ்டி வேரியண்ட்டில் வழங்கப்படவில்லை.

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

எனினும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எக்ஸ்டி வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும். க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோ் சிஸ்டம், பிரிமீயம் ஆடியோ சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், கார்னரிங் ஹெட்லட்டுகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள் ஆகியவை இந்த எக்ஸ்டி வேரியண்ட்டில் கொடுக்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாகவே எக்ஸ்டி வேரியண்ட் உள்ளது.

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்

டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Motors has silently upgraded its Altroz premium hatchback in XT variant. The company has added new features to make the mid-spec trim even more attractive to the buyers. However, the company has not increased the prices of the variant with the new update.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X