டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனான டாடா கிராவிட்டாஸ் காரின் உற்பத்தி எப்போது தொடங்குகிறது? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா அல்ட்ராஸ் கார், மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

அல்ட்ராஸ் தவிர நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. நேரடி போட்டி இல்லை என்றாலும், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா உள்ளிட்ட கார்களுக்கு, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

இந்த சூழலில் 2020ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒரு சில புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், முதலில் விற்பனைக்கு வரவிருப்பது டாடா கிராவிட்டாஸ் கார் ஆகும். தற்போது விற்பனையில் உள்ள ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் கிராவிட்டாஸ்.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் கிராவிட்டாஸ் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. எனவே நடப்பாண்டிலேயே கிராவிட்டாஸ் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், டாடா கிராவிட்டாஸின் அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி போயுள்ளது.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

இந்த சூழலில் டாடா கிராவிட்டாஸ் காரின் உற்பத்தி அடுத்த மாதம் (ஜனவரி) தொடங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து ஜனவரி இறுதியிலோ அல்லது அதற்கு அடுத்த பிப்ரவரி மாதத்திலோ டாடா கிராவிட்டாஸ் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

தற்போது விற்பனையில் உள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன், டாடா கிராவிட்டாஸ் போட்டியிடும். இது மூன்று வரிசைகள் கொண்ட கார் ஆகும். டாடா ஹாரியர் கட்டமைக்கப்பட்ட அதே ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் டாடா கிராவிட்டாஸ் காரும் கட்டமைக்கப்படுகிறது.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

இந்த 2 கார்களின் வெளிப்புறத்திலும் மிகச்சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு இடமளிப்பதற்காக, இதன் பின் பகுதி நீளமாக வழங்கப்படும். எனினும் உட்புறத்தில் டாடா ஹாரியரில் உள்ள அதே வசதிகள்தான் கிட்டத்தட்ட டாடா கிராவிட்டாஸ் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா கிராவிட்டாஸ் உற்பத்தி எப்போது தொடங்குகிறது தெரியுமா? ஜனவரி இறுதியில் விற்பனைக்கு வரலாம்!

டாடா கிராவிட்டாஸ் காரில், 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Tata Gravitas Production To Begin In January 2021: Reports. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X