முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் டாடா கிராவிட்டாஸ் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

இந்திய சந்தையில் கிராவிட்டாஸ் 7 சீட்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. மூன்று வரிசைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் டாடா கிராவிட்டாஸ் போட்டியிடும்.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கிட்டத்தட்ட தயாரிப்புக்கு உகந்த நிலையில் டாடா கிராவிட்டாஸ் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இந்திய சாலைகளில் டாடா கிராவிட்டாஸ் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக அதன் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தள்ளி போயுள்ளது.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில் டாடா கிராவிட்டாஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் கிராவிட்டாஸ். டாடா ஹாரியர் மற்றும் கிராவிட்டாஸ் ஆகிய இரண்டு கார்களின் வீல் பேஸ் நீளமும் 2,741 மிமீதான். ஆனால் டாடா ஹாரியரை விட கிராவிட்டாஸ் 63 மிமீ நீளமானது மற்றும் 80 மிமீ உயரமானது.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

டாடா கிராவிட்டாஸ் சாலை சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. எனினும் இதுவரை வெளியான ஸ்பை படங்களில் மறைப்புகளுடன்தான் டாடா கிராவிட்டாஸை நம்மால் பார்க்க முடிநதது. ஆனால் தற்போது முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் சோதனை செய்யப்பட்ட டாடா கிராவிட்டாஸின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

இதில், டாடா கிராவிட்டாஸின் பின் பகுதியை நம்மால் தெளிவாக காண முடிகிறது. தடிமனான க்ரோம் பட்டையை டாடா கிராவிட்டாஸ் பெற்றுள்ளது. காரின் ஒட்டுமொத்த அகலத்திற்கும் இந்த க்ரோம் பட்டை நீண்டுள்ளது. அத்துடன் நம்பர் பிளேட்டிற்கு கீழே கிராவிட்டாஸ் என பெரிதாக எழுதப்பட்டுள்ளது. டாடா கிராவிட்டாஸ் காரில் 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் உட்புறத்தை போன்றேதான் டாடா கிராவிட்டாஸின் உட்புறமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் வசதிகளிலும் இது டாடா ஹாரியரை பிரதிபலிக்கும். ஆனால் சில மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டாடா கிராவிட்டாஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 2020ம் ஆண்டிலேயே டாடா கிராவிட்டாஸ் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக அதன் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தள்ளி போயுள்ளது.

முதல் முறையாக மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் சிக்கிய கிராவிட்டாஸ்... கார் எப்படி இருக்குனு பாருங்க

ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை டாடா களமிறக்குவது போல், கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை ஹூண்டாய் களமிறக்கவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Bharath Vanguri

Most Read Articles
English summary
Tata Gravitas Spied Ahead Of Launch - Details. Read in Tamil
Story first published: Monday, December 21, 2020, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X