எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

டாடா ஹெரியர் மாடலின் 7 இருக்கை வெர்சன் காராக உருவாக்கப்பட்டுள்ள கிராவிட்டாஸ் மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கிராவிட்டாஸ் எஸ்யூவி காரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த கார் தமிழகத்தில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

இதுகுறித்து 4X4 இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில் உள்ள சோதனை கிராவிட்டாஸ் மாதிரி 6 இருக்கை வெர்சனாகும். இதில் கேப்டன் இருக்கைகள் மையத்தில் உள்ளன. இந்த எஸ்யூவி 7 இருக்கை மட்டுமில்லாமல் 6 இருக்கை வெர்சனிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

இதன் 5-இருக்கை வெர்சனான ஹெரியருடன் ஒப்பிடும்போது இது 63மிமீ நீளமும், 80மிமீ உயரமும் அதிகமாகும். இருப்பினும் வீல்பேஸில் எந்த மாற்றமும் இல்லை. இந்த எஸ்யூவி காரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை டாடா மோட்டார் நிறுவனம் பொருத்தியுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

ஹெரியர் மாடலிலும் உள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 167 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

அதேபோல் ஹெரியர் காரில் வழங்கப்பட்டு வருகின்ற 18 இன்ச் இரட்டை-டோன் அலாய் சக்கரங்களை அதே டிசைனில் தான் இந்த எஸ்யூவி காரும் பெற்றுள்ளது. இருப்பினும் அந்த 5-இருக்கை வெர்சனில் இருந்து வேறுபடுவதற்காக சில அம்சங்களும் கிராவிட்டாஸ் மாடலில் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

இதில் ஸ்டெப்டு-ரூஃப் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ரூஃப் டெயில்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை மட்டுமில்லாமல் ஆட்டோமேட்டிக் பை-செனான் ஹெட்லேம்ப்கள், எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக், 8.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் இந்த எஸ்யூவி காரில் பெறலாம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...

விசிறி வேக கண்ட்ரோல் உடன் ஏசி வெண்ட்ஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மூன்றாவது இருக்கை வரிசைக்கும் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல்களுக்கு போட்டியாக விளங்குவுள்ள டாடாவின் இந்த எஸ்யூவி காரின் அறிமுகம் வருகிற ஜூலை 13ஆம் தேதி இருக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Gravitas six-seat variant spotted; will rival MG Hector Plus
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X