புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

எச்2எக்ஸ் என்ற சிறிய அளவிலான எஸ்யூவி மாடல் இந்த வாரம் டெல்லியில் துவங்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய எஸ்யூவியின் டீசர் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

முதன்முறையாக கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற 2019 மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்த இந்த எஸ்யூவி மாடல், அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

ஹார்ன்பில் என்ற புதிய பெயரை இந்திய மார்க்கெட்டிற்காக பெறவுள்ள டாடா மோட்டார்ஸின் இந்த எச்2எக்ஸ் மாடலின் அறிமுகம் பண்டிக்கை காலமான 2020 தீபாவளியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் தயாரிப்பு மாடல்கள் புனேவில் உள்ள டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

இந்த எஸ்யூவி கார் பெரும்பாலான டிசைன் பாகங்களை டாடா ஹெரியர் மாடலில் இருந்து பெற்றுள்ளது. ஆனால் ஹெரியர், டாடா நிறுவனத்தின் ஒமேகா ஆர்க் என்ற ப்ளார்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் மாடலாகும். எச்2எக்ஸ் எஸ்யூவியோ ஆல்பா ஆர்க் என்ற ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

எச்2எக்ஸ் எஸ்யூவியை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆல்பா ஆர்க் ப்ளாட்ஃபாரம் புதியதாகும். மேலும் இந்த கட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் மாடல்களில் உடற் தோற்றம் மற்றும் என்ஜின் பாகங்களில் அதிகளவில் தேர்வுகளை கொண்டுவர முடிகிறது.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

இந்த புதிய கட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் முதல் மாடல் அல்ட்ராஸ் ஆகும். இந்த கார் கடந்த ஜனவரி 22ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ப்ளாட்ஃபாரம் மட்டுமில்லாமல், டாடா இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் மொழியை தான் எச்2எக்ஸ் எஸ்யூவி மற்றும் அல்ட்ராஸ் மாடல்கள் பெற்றுள்ளன.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

முக்கியமான அம்சங்களாக இந்த எஸ்யூவி கார் முன்புறத்தில், நேர்த்தியான தேன்கூடு வடிவில் க்ரில், இரட்டை-சேம்பர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், சதுரமான வீல் ஆர்ச்கள், ஸ்லோப்பிங் ரூஃப்லைன், பின்புற விண்ட்ஷீல்டு வைபர் மற்றும் எட்ஜ் டெயில் லேம்ப்களை கொண்டுள்ளது.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

இந்த காரில் உள்ள முரட்டுத்தனமான கேரக்டர் லைன் தான் இந்த காருக்கு எஸ்யூவி தோற்றத்தை தருகிறது. இதேபோல் உட்புறத்திலும் உயர்ரகத்தில் கேபினை எதிர்பார்க்கலாம். உலகில் உள்ள முக்கியமான யூஎஸ்பிகள் இந்த எஸ்யூவி காருக்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்கவுள்ளனர்.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

இதனால் இந்த காரில் இதன் பிரிவில் உள்ள மற்ற மாடல்களில் உள்ளதை விட அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை எதிர்பார்க்கலாம். ரியர் பார்க்கிங் சென்சார்கள், இரட்டை காற்றுப்பைகள், கார்னரிங் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பின்புற டிஃபாக்கர் மற்றும் தன்னிச்சையாக ஒளி மங்கக்கூடிய ஐஆர்விஎம்கள் உள்ளிட்டவை இந்த காரில் எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்களாகும்.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

இவற்றுடன் சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங், உயரத்தை சரி செய்யும் வகையிலான ஓட்டுனர் இருக்கை மற்றும் எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங் போன்றவற்றையும் இந்த எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

என்ஜின் அமைப்பாக இந்த காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. டாடா டிகோர் மற்றும் டியாகோ மாடல்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும்.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. இந்த எஸ்யூவி காருக்கு டீசல் வேரியண்ட் வழங்கப்படவில்லை. ஏனெனில் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டின் விலை இந்த காரை விலையுயர்ந்த காரை போல் வாடிக்கையாளர்களை உணர வைக்கும்.

புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகத்தை டீசர் மூலம் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..

ரூ.5 லட்சம் அளவில் விலையை பெறவுள்ள இந்த எச்2எக்ஸ் எஸ்யூவி மாடலுக்கு மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் மஹிந்திரா கேயூவி100 கார்கள் போட்டியாக இருக்கும். இதன் பிரிவில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடலுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனை தன் பக்கம் திரும்பும் முயற்சியாக தான் டாடா நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி மாடலை விற்பனை கொண்டு வருகிறது.

Most Read Articles

English summary
Tata H2X unveil at auto expo first teaser revealed
Story first published: Monday, February 3, 2020, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X