கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெரியர் எஸ்யூவி கார் மாடிஃபைடு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை இதற்கு முன் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது மீண்டும் டெட்புல் மற்றும் வெனோம் கிராஃபிக்ஸ் உடன் ஹெரியர் கார் ஒன்று அட்டகாசமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

இதுகுறித்த arwrap786 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கார் இறுதியாக எவ்வாறான தோற்றத்திற்கு மாறுகிறது என்பதை விளக்கும் வகையில் முழு செயல்பாடுகளும் விரிவாக காட்டப்பட்டுள்ளன.

இந்த மாடிஃபைடு பணியில் உட்படுத்தப்பட்டுள்ள ஹெரியர் கார் கலிஸ்டோ கூப்பர் ஷேடில் உள்ள பிஎஸ்4 வெர்சனாகும். இந்த மாற்றத்தால் மேற்கூரை கருப்பு நிறத்திற்கும், காரின் மற்ற பாகங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்திற்கும் முதலில் மாற்றப்படுகின்றன. இந்த சிவப்பு உடை பிஎஸ்6 ஹெரியருக்கு கொடுக்கப்படுவதை போலவே உள்ளது.

கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

இந்த வ்ராப்-ஐ காருக்கு கொடுத்தப்பின் டெட்புல் மற்றும் வெனோம் ஸ்டிக்கர்கள் காரின் வுட், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின்பகுதிகளில் ஒட்டப்படுகின்றன. இவ்வாறான மாடிஃபைடு வேலைகளில் ஈடுப்படுத்தப்பட்ட முதல் டாடா ஹெரியர் மாடல் இதுதான்.

கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

இந்த மாடிஃபைடு ஹெரியர் காரை சாலையில் ஓட்டி சென்றால் நிச்சயம் அனைவரது கவனம் இதன் மீது தான் இருக்கும். காரும் பிஎஸ்4 வெர்சனை போல் காட்சியளிக்கவில்லை. டெட்புல் மற்றும் வெனோம் ஸ்டிக்கர்கள் பிஎஸ்6 டாடா ஹெரியர் காரில் ஒட்டப்பட்டுள்ளது போலவே தோற்றமளிக்கிறது.

கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

ஹெரியர் மாடலை பற்றி கூற வேண்டுமென்றால் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எச்2எக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட காராகும். 2019ல் அறிமுகமாகி அட்டகாசமான டிசைனினாலும், கவர்ச்சிக்கரமான விலை மதிப்பினாலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகுந்த வரவேற்பில் உள்ள எஸ்யூவி காராக இது விளங்குகிறது.

கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி காரில் கூடுதலான வசதிகளுடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. இந்த ட்ரான்ஸ்மிஷன் ஆனது 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பிஎஸ்6 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வழங்கப்படுகிறது.

கிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...

இந்த மாடிஃபைடு மாற்றத்தில் உட்படுத்தப்பட்டுள்ள இதன் பிஎஸ்4 வெர்சனில் இந்த டீசல் என்ஜின் மேற்கூறப்பட்ட அளவில் இருந்து 30 பிஎச்பி குறைவாக வெளிப்படுத்துகிறது. டாடா ஹெரியர் மாடலின் ஆரம்ப விலை ரூ.13.69 லட்சமாகவும், இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.16.25 லட்சமாகவும் உள்ளது.

Most Read Articles

English summary
India’s first Tata Harrier with Deadpool Venom wrap [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X