வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

வாடிக்கையாளர் ஒருவர் தனது டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மிகவும் ப்ரீமியம் தரத்திற்கு மாற்றியமைத்துள்ளார். வெளியாகியுள்ள இதுகுறித்த படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான எஸ்யூவி மாடலாக விளங்கும் ஹெரியரில் வழக்கமாக வழங்கப்படும் கருப்பு மற்றும் பழுப்பு நிற தீம்-க்கு பதிலாக பளிச்சிடும் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

இதனால் டேஸ்போர்ட்டில் ஃபாக்ஸ் ட்ரிம்மிற்கு மாற்றாக பளபளப்பான நீல நிறமும், பாதி கீழ் பகுதியில் வெள்ளை நிறமும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் பாஸ், கதவு பேனல்கள் மற்றும் டைமண்ட் டிசைன்களை கொண்ட லெதர் இருக்கை உள்ளிட்டவை வெள்ளை நிறத்தை பெற்றுள்ளன.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

இந்த நீலம்-வெள்ளை நிற கலவையுடன் பார்டர்களில் கருப்பு நிறமும் வழங்கப்பட்டிருப்பது மிகவும் கவர்ச்சியாக உள்ளது. அதேபோல் கதவு ஹேண்டில்களின் நீல நிறமும் கவரும்படி உள்ளது. மற்றப்படி ஹெரியர் காரின் உட்புறத்தில் வழங்கப்படும் தொழிற்நுட்ப வசதிகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

இதன்மூலம் கேபினில் காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டும் தான் நொய்டாவை சேர்ந்த ரோட்ஸ்டர் குரு என்ற மாடிஃபைடு நிறுவனம் கொண்டு வந்திருப்பதை அறியலாம். வெளிப்புறத்தில் முன்புற பம்பரில் கஸ்டம் வெள்ளை கன்னம் போன்ற பேனலையும், பின்புறத்தில் போலியான எக்ஸாஸ்ட் மூடியுடன் வெள்ளை டிஃப்யூஸரையும் புதியதாக இந்த கார் பெற்றுள்ளது.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

என்ஜின் அமைப்பில் கஸ்டமைஸ்ட் நிறுவனம் கை வைக்கவில்லை. டாடா நிறுவனம் சமீபத்தில் பிஎஸ்6 அப்டேட் உடன் ஹெரியர் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. ரூ.70,000 விலை அதிகரிப்புடன் சந்தைக்கு வந்த பிஎஸ்6 காரில் முக்கிய மாற்றமாக இதன் 2.0 லிட்டர் டீசர் என்ஜின் கூடுதலாக 30 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

இந்த பிஎஸ்6 டீசல் என்ஜின் தற்போது அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரை காருக்கும் வழங்கும். இதேபோல் பிஎஸ்6 அப்டேட்டாக புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் இந்த கார் ஏற்றுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் தயாரிப்பில் தற்சமயம் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

வெளியே, உள்ளே என இருபுறங்களிலும் மெர்சலான தோற்றத்தில் டாடா ஹெரியர்- அசத்தி காட்டியுள்ள வாடிக்கையாளர்

இந்த வகையில் இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்படவுள்ள 1.5 லிட்டர் ரெவோட்ரான் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இதற்கும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம்.

Most Read Articles
English summary
Tata Harrier interiors modified – Gets bold White and Blue finish
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X