ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

அதிக திறன் மற்றும் புதிய நிறத்தேர்வுடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 மாடல் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் என்ஜின் உள்பட முக்கியமான பாகங்கள் அனைத்தும் பிஎஸ்4 மாடலில் இருந்து முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய ஹெரியர் பிஎஸ்6 மாடலில் பனோராமிக் சன்ரூஃப், இரு டோன்களில் 17-இன்ச், 5-ஸ்போக், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், 6 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் தன்னிச்சையாக ஒளி மங்கக்கூடிய ஒஆர்விஎம்கள் உள்ளிட்டவை அப்டேட்களாக வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இவற்றை எல்லாம் விட கவனித்தக்க விஷயமாக இந்த 2020 மாடலில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் எக்ஸ்எம்ஏ, எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ என்ற மூன்று தேர்வுகளில் டீலர்ஷிப்களிடம் விரைவில் விற்பனை கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இவற்றுடன் கேலிப்ஸோ சிவப்பு (சிவப்பு/ கருப்பு) என்ற புதிய நிற தேர்வையும் ஹெரியர் பிஎஸ்6 மாடலுக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் இந்த புதிய மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான அதே 2.0 லிட்டர் க்ரேயோடெக் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும்.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் பிஎஸ்4 ஹெரியர் மாடலில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஹெரியர் மாடலின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஒருவழியாக புதிய மாசு உமிழ்வு விதியால் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த 2020 ஹெரியர் பிஎஸ்6 மாடலில் அதிக அளவில் எரிபொருள் திறனை டாடா நிறுவனம் வழங்கியுள்ளதால், இந்த கார் தான் இனி அதன் பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாடல் கார்களையும் விட அதிக திறன் வாய்ந்த மாடலாக விளங்கவுள்ளது. மேலும் ஹெரியர் பிஎஸ்6 காருக்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டாடா டீலர்ஷிப்களிலும் ரூ.30,000ல் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த மாடலின் 5-இருக்கை வெர்சன் இந்திய சந்தையில் மிக பிரபலமான மாடலாக உள்ளதால், ஹெரியரின் பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் வேரியண்ட் மாடல் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த பிஎஸ்6 மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உடன் டாடா ஹெரியர் பிஎஸ்6 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.13.69 லட்சத்தில் (எக்ஸ்இ மேனுவல் வேரியண்ட்) இருந்து ரூ.20.25 லட்சம் (எக்ஸ்இசட்ஏ+ டார்க் ஆட்டோமேட்டிக்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா ஹெரியர் மாடலுக்கு சந்தையில் போட்டியாக உள்ள எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் மாடல்கள் இதன் பிஎஸ்6 வெர்சனுடனும் போட்டியிடவுள்ளன.

Most Read Articles
English summary
2020 Tata Harrier BS6 Unveiled At Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X